2022 ஆண்டின் சாரதா நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5 ஆம் தேதி முடிவடைகிறது. ஜோதிடத்தின் படி, கலசம் வைக்க சிறந்த நேரம் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 6.20 மணி முதல் 10.19 மணி
வரை ஆகும்.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களும் சிறப்பாக வழிபடப்படுகின்றன. நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து துர்கா தேவியை வழிபடுவதன் மூலம், வாழ்வில் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சனைகளில் இருந்தும்
விடுபட முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் துர்கா தேவி ஒவ்வொரு வாகனத்தில் பயணம் செய்வார். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் துர்கா தேவி யானை மீது பயணிக்கிறார். ஜோதிடத்தின் படி, இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனும், சிலருக்கு மோசமான பலனும் கிடைக்கலாம். இப்போது 12 ராசிக்குமான நவராத்திரி ராசிப்பலன்களைக் காண்போம்.
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு நவராத்திரி காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பணிபுரிபவர்கள் கவனமாக வேலை செய்ய வேண்டும். ஆனால் வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இது நல்ல காலம். இக்காலத்தில் செலவுகளை பார்த்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். துர்கா தேவியின் அருளால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் பரிபூர்ண அருள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். அனைத்து வேலைகளையும் பொறுமையாக முடிப்பீர்கள். வணிகர்களுக்கு அம்மனின் அருள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வேலை
வாய்ப்புக்கள் கிடைக்கும்
மிதுனம்மிதுன ராசிக்காரர்களும் துர்கையின் அருளைப் பெற்றிருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்கள் இலக்குகளை அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்நவராத்திரி காலத்தில் கடக ராசிக்காரர்கள் நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். உங்கள் மாமியார்-மாமனாருடனான உறவு சமூகமாக இருக்கும். வேலையை மாற்ற நினைத்தால், அம்மனின் அருளால் அது நிறைவேறும். உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் மன அழுத்தம் உங்கள் வேலையை மோசமாக
பாதிக்கும்.
சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு சற்று சுமாராகவே இருக்கும். வேலையுடன் குடும்பத்தையும் இக்காலத்தில் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். துர்கா தேவியின் அருளால் இக்காலத்தில் உங்களின் வேலைகள் அனைத்தும் சமூகமாக முடிந்து, புகழ் அதிகரிக்கும். காதலிப்பவர்களிடையே காதல் அதிகரிக்கும். உங்கள் உறவு இனிமையாகவும்
வலுவாகவும் இருக்கும். இக்காலத்தில் உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.
கன்னிகன்னி ராசிக்காரர்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நிறைய நேரத்தை செலவிடுவார்கள் மற்றும் அவர்களின்
முழு ஆதரவைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறை தேவைப்படுகிறது.
திருமணமான தம்பதிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஆனால், இக்காலத்தில் நிதி முடிவுகளை அவசரப்பட்டு
எடுத்துவிடாதீர்கள்.
துலாம்துலாம் ராசிக்காரர்கள் துர்கா தேவியின் அருளால் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். துர்கையின் அருளால் காதல் மற்றும் திருமண வாழ்க்கை நேர்மறையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவைப் பேண அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களின் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும், வேலையில் சில சிக்கல்களை சந்திக்கலாம். உங்களின் வருமானம் உயர வாய்ப்புள்ளது. துர்கா தேவியின் அருளால் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவை வலுப்படுத்தி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள்.
தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு நவராத்திரி காலத்தில் மனக்கவலைகள் நீங்கி காரியங்கள் சுமூகமாக நடக்கும். திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். சமூக தொடர்புகள் அதிகரிக்கும். உங்களின் இமேஜ் இக்காலத்தில் மேம்படும். துர்கா தேவியின் அருளால், இந்த காலத்தில் உங்கள் வீட்டில் மன அழுத்த சூழ்நிலைகளை எளிதில் கையாள முடியும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை
எதிர்பார்க்கலாம்.
மகரம்மகர ராசிக்காரர்கள் நவராத்திரி காலத்தில் அம்மனின் அருளால் பல முன்னேற்றங்களைக் காண்பார்கள். நேர்மறை எண்ணங்களால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். இக்காலத்தில் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களுடனான உறவு
நன்றாக இருக்கும்.
கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இருக்கும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள்
நீங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உங்களின் முதலீடுகளால் நிதி நிலைமை
மேம்படும்.
மீனம்மீன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். துர்கா தேவியை வழிபட்டால் நேர்மறையாக இருப்பீர்கள். இக்காலத்தில் புதிய வேலையை தொடங்க விரும்புர்கள். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் தந்தையுடன் சில கருத்து வேறுபாடு ஏற்பட
வாய்ப்புள்ளது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen