புதிய புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்க இப்ப என்ன செய்யணும் தெரியுமா?

புதிய ஆண்டு தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ளன. புத்தாண்டு தொடங்கும்போது நம் வாழ்க்கையும் புதிதாக தொடங்க வேண்டும். பழமையான பல விஷயங்களை தவிர்த்து புதிய எண்ணங்களையும் 
சிந்தனைகளையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்க்கை அவ்வளவு எளிமையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை எளிதாக்குவதற்கு 
நீங்கள் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் 
நேரத்தையும் இடத்தையும் பணத்தையும் எடுக்கும் தேவையற்ற விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்ற வேண்டும்.
இதைப் பற்றி சொல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் 2023 தொடங்குவதற்கு முன் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் சில யோசனைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
நம் சமூக ஊடகங்களில் ஒழுக்கமில்லாத நண்பர்கள் பலர் உள்ளனர், மேலும் அவர்களை தனிப்பட்ட முறையில் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் படங்களை விரும்பலாம், 
ஆனால், அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறிந்து
கொள்ளாமல் நட்பில் இருப்பது, உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், இதுவே உங்கள் நேரம், சமூக ஊடகங்களில்
 இருக்கும் தேவையில்லா நபர்களை நீக்கவும். உங்களுக்குத் தெரிந்தவர்களை அங்கேயே வைத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள்
 யாருடன் தொடர்பில் இருப்பீர்கள் அல்லது கவனிப்பீர்கள் என்று நினைக்கவில்லையோ, அவர்களை அகற்றவும். உண்மையானவர்களுக்கு இடம் கொடுங்கள்.
காகித ஒழுங்கீனத்தை வரிசைப்படுத்தவும் இதற்கும் ஃபெங் சுய்க்கும் நிறைய தொடர்பு உள்ளது. ஆனால் தர்க்கரீதியாக, உங்களுக்கு ஏன் இவ்வளவு ரசீதுகள் மற்றும் பழைய ஆவணங்கள் தேவை என்பதை யோசிக்க
 வேண்டும். அது இன்று எந்தப் பயனும் இல்லாதது. 
குப்பை காகிதங்களை உங்கள் வீட்டில் மற்றும் அலமாரிகளில் இருந்து அகற்றவும். உண்மையில் காகிதம் மட்டுமல்ல, உங்கள்
 மின்னஞ்சல் கூட சுத்தமாக இருக்க வேண்டும். முடிந்தால், உங்கள் பில்களை மின்னணு முறையில் பெற தேர்வு செய்யவும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.