உங்களுக்கு எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ள இவரை வழிபாடு செய்யுங்கள்

இவரை தஞ்சமடைவதால் மட்டும் தெரிந்தும், தெரியாமலும் செய்த எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம். இவரை வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிவ தரிசனத்திற்கும் நிச்சயம் அளவற்ற பலன் உண்டு. எங்கோ எப்போதோ யாருக்கோ செய்த
பாவங்கள் கூட சிவபெருமானை தரிசிக்கும்போது பஞ்சாய் பறந்து போகும். பாவங்களை கழுவிக் களைவதில் சிவபெருமானுக்கு நிகர் சிவபெருமானே. ஆகையால் தான் புராணங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைவரும் பாவங்களை தீர்க்க சிவபெருமானை
 பூஜிக்கிறார்கள்.
பொதுவாக ஒருவருக்கு நாம் தீங்கி ழைத்துவிட்டாலோ, பாவமிழைத்து விட்டாலோ சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் மன்னித்தால் தான் நாம் பாவத்தை போக்கிக்கொள்ளமுடியும். அவர்களுக்கு தீங்கிழைத்துவிட்டு வேறு ஒருவரிடம் போய் மன்னிப்பு கேட்டால் அது செல்லுபடியாகாது. அதாவது பாவம் ஒரு இடம் பரிகாரம் ஒரு இடம் என்று செய்யமுடியாது.
ஆனால், சிவபெருமானை தஞ்சமடைவதால் மட்டும் எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம். பிரசித்தி பெற்ற ஆலயங்களின் அனைத்து தல வரலாறுகளிலும் இந்த பேருண்மையை நீங்கள் உணரலாம்.சிவனை நினை!சிவன் புகழ் பாடு!சிவ யோகம் பெறு!
திருச்சிசிற்றம்பலம்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.