பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினை என்பது பொதுவாக உள்ள ஒரு விஷயம், பிரச்சனைகள் விதவிதமாக நம்மை வந்து சேரும் சில பிரச்சனைகள் நம் தீர்வு காணக்கூடியதாக இருக்கும்,
வாழ்க்கையில் மிக அதிக பிரச்சனைகளில் ஒன்றான
பண பிரச்சினை மற்றொன்று கணவன்
மனைவிக்கு
இடையே பிரச்சனைகள் போன்றவை மக்களுக்கிடையே அதிகம் இருக்கும். இது போன்ற அனைத்து பொதுவான பிரச்சினைகளும் சேர்ந்து இருக்கும், இவ்வகையான பிரச்சினைகளுக்கு நாம் ஜோசியரை பார்த்திருப்போம் கடவுள் ஆலயத்திற்கு சென்று இருப்போம் ஆனால் பிரச்சனை
தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். இதற்கெல்லாம் நாம் என்ன கடைப்பிடிக்க வேண்டும் எந்தக் கடவுளை நாம் கும்பிட்டால்
நம் பிரச்சினைகள் தீரும் என அனைத்திற்கும் இப்பதிவில்
குறிப்பிட்டுள்ளோம்.
விஷ்ணுவின் அவதாரம் நரசிம்ம அவதாரம், சிங்கத்தின் தலையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார், நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடன் நகங்களோடும் மனித உடலோடும்
தோற்றமளிக்கிறது. தனது பக்தர்களை தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக நரசிம்ம கடவுள் கருதப்படுகிறார். நரசிம்ம அவதாரத்தை பற்றி பல குறிப்புகள் காணப்படுகிறது அதில் பாகவத புராணம்,
அக்னி புராணம், வாயுபுராணம், பிரம்ம புராணம், மச்ச புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், லிங்க புராணம், சிவபுராணம், கூர்ம புராணம் உள்ளிட்ட 17 புராணங்கள் நரசிம்ம அவதாரத்தை தெளிவாக
வெளிப்படுத்துகிறது.
அக்னி போல கண்களுடையவர் கர்ஜனையால் எதிரிகளை பயமுறுத்துபவர் அகன்ற வாயு கூர்மை பற்களும் கொண்டவர் நாங்களே ஆயுதமாவுடையவர் சிங்க முகத்தைக் கொண்டவர் என நரசிம்ம கடவுளை குறிப்பிடலாம். நரசிம்மர் அவதாரத்தின் வழியே இன்றளவும் நம் அனைவரையும்
அருள் தந்து நம்மை பாதுகாக்கிறார் நரசிம்ம கடவுளின் திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டால் பெரிய தடைகள் தூள் தூளாக உடைந்து விடும்.
கணவன் மனைவி பிரச்சனை
நரசிம்மக் கடவுள் சிங்கம் முகத்தோடு மனித உடலோடு இருக்க அமைப்பை பார்த்தால் உக்கிரமாக இருப்பது போல் தோன்றும் ஆனால் நரசிம்மரோ குழந்தை மாதிரி நாம் அவரிடம் வேண்டும்போது
அவர் குழந்தையாக மாறிவிடுவார் ஒரு சாந்த குணம் கொண்ட கடவுள். நரசிம்மரை நாம் மனதார நினைத்து மனம் உருகி வேண்டும் பொழுது நாம் என்ன நினைத்து வேண்டினோமோ அந்த வேண்டுதலை
அனைத்தையும் நடத்திக் காட்டுவதில் அவர் கெட்டிக்காரர். கணவன் மனைவி உறவில் உரசல் ஏற்பட்டு பிரிந்து தம்பதிகள் மீண்டும் கணவன் மனைவியாக இணைந்து வாழ வேண்டும் என்பார்கள் வெள்ளிக்கிழமை
அன்று நரசிம்மரை வழிபட்டு வந்தால் கணவன் மனைவி இடையில் உள்ள பிரச்சனைகள் தீர கூடியதாக இருக்கும். அதே நாளில் அம்மனையும் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து வந்தால் பிரிந்தவர்கள் மீண்டும் உங்களை தேடி வந்து சேர்வார்கள்.
நல்ல வேலை கிடைக்க
இன்று பொதுவாக நாம் படும் பிரச்சனையில் வேலை ஒன்று சிலருக்கு எதிர்பார்த்த வேலை அமையாது வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கும், புதன்கிழமை நாட்களில் நரசிம்மர்
கோயிலுக்கு சென்று அவரை வழிபட்டு மனதார வேண்டும்
போது நரசிம்மன் நமக்கு நல்ல வேலை
கிடைக்கும்படி
செய்வார், பல பல நாட்களாக அரசுத் துறையில் வேலையில்
சேர முயற்சி செய்து கொண்டிருப்பார்கள் பெரிய பெரிய கம்பெனிகளிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் வேலைக்கு சேர முயற்சி
செய்பவர்கள், இப்படிப்பட்டவர்கள் நரசிம்மரை தரிசனம்
செய்து விட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்து வந்தால் உங்கள் வேலை ரீதியான எந்த பிரச்சனையும் இருந்தாலும் அது சரியாக
போய்விடும்.
பண பிரச்சனை
இப்ப நம் வாழ்க்கையை செழிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் நம்மிடம் பணம் கட்டாயம் தேவை, சில தேவைக்கு அதிகமாக அல்லது அவர்களை எதிர்பாக்காத வண்ணம் சில கடன் பிரச்சினை
மாட்டிக் கொண்டு தவிப்பார்கள் அப்படி எந்தவிதமான பிரச்சனைகளிலும் இருந்தாலும் செவ்வாய்க்கிழமை என்று நரசிம்ம கோயிலுக்கு சென்று அவரை தரிசித்து வந்தால் மலை போல் இருக்கும் பிரச்சினை பனிபோல் பறந்து விடும். பக்தர்களின் குறைகளைக் கேட்டு பூர்த்தி செய்வார்
நரசிம்ம கடவுள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen