உங்கள் வீட்டில் செவ்வாய் வெள்ளிகளில் சாம்பிராணி போடும் போது இதை செய்யுங்கள்

ஒரு வீட்டில் பார்த்த உடனே சொல்லலாம் வீட்டில் நேர் சக்தி அதாவது பொசிடிவ் எனர்ஜி உண்டா இல்லையா என்று. இதனை வீட்டில் நுழையும் போதே கண்டுபிடித்துவிடலாம்.
 இப்படிப்பட்ட உணர்வு பெரும்பாலும் எல்லா வீட்டிலும் இருக்காது. சில வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி இல்லாமல், இருள் சூழ்ந்த சூழ்நிலை இருக்கும். பெரும்பாலும் இப்படிப்பட்ட வீடுகளை தேர்ந்தெடுத்து யாரும் குடி போக மாட்டார்கள் ஆனால் சில பேரின் சூழ்நிலை இப்படிப்பட்ட வீட்டில் குடியிருந்து தான் ஆக வேண்டும் என்பது.
 இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் என்ன செய்வது? அந்த வீட்டில் சில விஷயங்களை செய்யும் போது பாசிட்டிவாக மாற்ற முடியும். அது எப்படி என்பதை பற்றித்தான் இன்றைய பதிவு.
 இந்தப் புகையை, இந்த மூன்று பொருட்களும் சேர்ந்த பொடியை சாம்பிராணி தூபத்தோடு கலந்து போட்டால் உங்களுடைய வீட்டில் பாசிட்டிவ் 
எனர்ஜி அதிகரிக்கும்.
 வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி வெளியே விரட்டி அடிக்கப்படும். வீட்டில் ஐஸ்வரியம் தங்கும். அந்த மூன்று பொருட்கள் என்னென்ன அதை எப்படி சாம்பிராணி தூபத்தோடு சேர்ப்பது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல் இதோ உங்களுக்காக.
 வெட்டிவேர், நன்னாரி வேர், வெள்ளை குங்கிலியம். இந்த மூன்று பொருட்களும் உங்களுக்கு பொடியாக தேவை. நாட்டு மருந்து கடைகளில் கேட்டாலே இப்போது கிடைக்கின்றது.
 செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை சாம்பிராணி தூபம் போடும்போது அந்த தூபத்தில் இந்த மூன்று பொடியையும் ஒவ்வொரு ஸ்பூன் அளவு கலந்து விடுங்கள். இந்த புகை கொஞ்சம் கொஞ்சமா 
ஆக வெளியேறும். 
உங்கள் வீடு முழுவதும் பரவும். வீட்டில் இருப்பவர்களுடைய சுவாசத்திலும் இந்த புகை கலக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வீட்டின் ஆரோக்கியத்திற்கும் ரொம்ப ரொம்ப நல்லது.
வீட்டிலிருக்கும் பணக்கஷ்டம், கடன் சுமை வெளியேற்றப்பட்டு, வீட்டினுள் மகாலட்சுமியை அழைக்க ஆன்மீகத்திலே இந்த துாபம் ஒரு சிறந்த முறையாக சொல்லப்படுகிறது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.