வீட்டில் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை தீபம் ஏற்றி வழிபடுவது உண்டு. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கட்டாயம் தீபமேற்றி வழிபடுவோம். அப்படி வழிபடும் பூஜையில் எரியும் தீபத்தின் ஜோதியில் இறைவன் இருப்பதாக ஐதீகம். தீபம் ஏற்றும் இல்லங்களில் நேர்மறை
ஆற்றல் அதிகரிக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. தீபத்தில் நாம் ஊற்றும் எண்ணெய் மற்றும் திரி இரண்டுமே மிகவும் முக்கியமானது. அதில் திரியானது எரிந்து கருகினால் வீட்டில் என்ன நடக்கும்? என்று சாஸ்திரம் கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து
இந்த பதிவை படியுங்கள் .
எரியும் தீபத்தை ஒரு பொழுதும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. அப்படி வாயால் ஊதி நெருப்பை அணைத்தால் அந்த வீட்டில் தரித்திரம் குடிகொள்ளும். வாயு பகவானுடைய சாபத்திற்கு ஆளாக நேரிடும்
என்பதால் இவ்வாறு ஊதக் கூடாது என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரியும் ஜோதி ஆனது இறைவனுக்கு சமமாக
பார்க்கப்படுவதால் வாயை
வைத்து ஊதி அணைக்க கூடாது. வாயிலிருந்து தெறிக்கும் எச்சில் இறைவனை அவமதிப்பதற்கு சமமாகும். இதனால் தெய்வ குற்றம் ஏற்பட்டுவிடும் என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து
வந்துள்ளனர்.
தீபத்தில் நாம் ஊற்றும் எண்ணெய் நல்லெண்ணெய் மற்றும் நெய்யாக இருக்க வேண்டும். தீபத்தில் ஊற்றப்படும் எண்ணெய் நிறைய
எண்ணெய்களின் கலவையாக கட்டாயம் இருக்கக் கூடாது.
கோவில்களில் ஏற்றப்படும் தீபத்தில் பஞ்சலோக எண்ணெய் கலந்து தீபம் ஏற்றலாம்.
ஆனால் அதை நாம் வீட்டில் செய்யக்கூடாது என்கிறது
சாஸ்திரம். ஒரு எண்ணெயோடு இன்னொரு எண்ணெய் சேர்ந்த கலவை எண்ணெயில் தீபம் ஏற்றினால் அந்த வீட்டில் தரித்திரம் உண்டாகும். வறுமை தாண்டவமாடும். வருமான இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
நவீன முறை
என்கிற பெயரில் பழங்கால நடைமுறை பழக்க வழக்கங்களை மாற்றி அமைப்பதில் கவனமுடன் இருப்பது நல்லது.
தீபத்தில் போடப்படும் திரியானது பல வகைகளில் விற்பனைக்கு உள்ளன. அவற்றில் ஒவ்வொரு திரிக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. பொதுவாக பஞ்சுத்திரி கொண்டு தீபம் ஏற்றும் பொழுது
சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படி ஏற்றப்படும் தீபத்தின் திரி எண்ணெய் தீர்ந்ததும் எரிய ஆரம்பிக்கும். அதற்குள் தீபத்தை
புஷ்பத்தை கொண்டு அணைத்து
விட வேண்டும்.
நாம் அப்படியே கவனக் குறைவாக இருந்து விட்டால் தீப திரி எரிந்து விடும். இதனால் குடும்பத்தில் பணவரவு தடைபடும். தொடர்ந்து இது போன்ற நிகழ்வு நடந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில்
செல்வ வளம் குறையும்.
அதே போல தீபத்தில் இருக்கும் எண்ணெய் முழுமையாகத் தீர்ந்து போகக் கூடாது. ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தீபத்தை எரிய விடாதீர்கள். எண்ணெய் தீரும் முன் தீபத்தை அணைத்து
விடுங்கள். அது போல் மீண்டும் தீபம் ஏற்றும் பொழுது வேறு ஒரு புது திரியை தான் பயன்படுத்த வேண்டும். திரி நன்றாக இருந்தாலும் அதே திரியை பயன்படுத்தக் கூடாது.
வாரம் ஒரு முறை கட்டாயம் விளக்கை தேய்த்து விட்டு தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் அதிலேயே இருந்தால் எண்ணெய்யின்
நிறம் பச்சையாக மாறிவிடும். இப்படி தீபத்தில் இருக்கும் எண்ணெய் பச்சையாக மாறினால் குடும்பத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்படுவதற்கு
வாய்ப்புகள் உண்டு.
அது போல் காமாட்சி அம்மன் விளக்கை தரையில் வைக்கக் கூடாது. விளக்கிற்கு அடியில் சிறிய தட்டாவது வைக்க வேண்டும். விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் வைக்காமல் தீபம் ஏற்றக் கூடாது.
வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருந்தால் அந்த சமயத்தில் தீபத்தை ஏற்றக் கூடாது. அவர்கள் எழுந்த பின்னர் தான் தீபத்தை ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி எப்பொழுதும் தீபத்தை ஏற்ற கூடாது. மற்ற
திசைகளில் தீபமேற்றுவது நல்ல
பலன்களை கொடுக்கும். குறிப்பாக கிழக்கு நோக்கி
தீபம் ஏற்றுவது உத்தமம். இப்படி தீபமேற்றும் விஷயத்தில் சிறு சிறு குறிப்புகளை நாம் கவனமாக
பார்த்துக் கொண்டால் குடும்பத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் பெற செய்வாள். மென்மேலும் செல்வமானது வளர்ந்து ஓங்கும்
என்பது நம்பிக்கை.ஆகும்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen