உங்களது நெருக்கடியான சூழ்நிலையிலும் பணக்கஷ்டம் தீர இந்த மூன்று விளக்கை ஏற்றினால் போதும்

உங்களது ஆபத்தான சூழ்நிலையிலோ அல்லது நெருக்கடியான சூழ்நிலையிலோ நமக்கு அதிகப்படியாக பணத்தேவை இருக்கும். ஒருவருக்கு நேரம் நன்றாக இருக்கும் சமயத்தில் எல்லா நன்மைகளும் ஒருசேர வந்துவிடும்.
 அதே சமயம் அவருக்கு நேரம் சரியில்லை என்றால் கஷ்டங்கள் ஒருசேர 
வந்து  கழுத்தை இறுக்கிப் பிடிக்கும். எல்லா பிரச்சினைகளுடன் சேர்ந்து இந்த
 பணப் பிரச்சனையும் நம்மை ஆட்டிப்படைக்கும். 
நமக்கு கஷ்டகாலம் இருக்கும் போதும் சரி. நல்ல நேரம் 
இருக்கும் போதும் சரி. நம்முடைய இறைவழிபாட்டை வலுவாக செய்துவிடவேண்டும். என்ன செய்தால் கஷ்ட காலத்திலும் வரும் துன்பங்களை 
சமாளிக்க முடியும் என்று நினைத்து, அந்த வழிபாட்டினை நல்ல நேரம் இருக்கும்போதே தொடங்கி விட்டால் நமக்கு வரும்
 பிரச்சினைகள் நிச்சயமாக குறைக்கப்படும். இப்படியாக நம் வீட்டில் விளக்கு
 ஏற்றி தினம்தோறும் வழிபடுவதன் மூலம் நல்ல பயனை நாம் அடையலாம்.
 இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இந்த விளக்கையே மூன்று 
திசைகளை பார்த்து நாம் ஏற்றும்போது நம் வாழ்க்கையில் வரும் கஷ்ட காலங்களை கூட, நாம் சுலபமாக சமாளித்து விடலாம்
 என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. அது என்ன முறை என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்
இந்த விளக்கை எப்படி ஏற்றுவது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, தடையற்ற பணவரவிற்கு ஒரு சுலபமான சிவன் வழிபாடு உள்ளது. அதை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக 
கோவில்களின் சன்னிதானம் கிழக்கை நோக்கி தான் இருக்கும். 
சிவபெருமான் கிழக்கை 
நோக்கி இருந்தால் லிங்கத்தின் ஆவுடையானது வடக்கு பக்கம் நோக்கி இருக்கும். அதாவது சிவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அந்த தண்ணீர் சென்று கீழே விழும் அல்லவா, அந்த வழியைத்தான் ஆவுடை என்று கூறுவார்கள். நீங்கள் சிவன் கோவிலுக்கு எப்போது சென்றாலும் நந்தியிடம் ‘நான் சிவனை பார்க்க செல்கின்றேன்’ என்று அனுமதி கேட்பதற்காக நிற்க
 வேண்டிய திசை வடக்கு திசையாக தான் இருக்க வேண்டும். வடக்கு திசையில் நோக்கி நின்று சிவபெருமானை வழிபட்டால் வற்றாத செல்வம் பெருகும் என்பது நிச்சயமான உண்மை. இதைப்போல் கோவிலில் நமஸ்காரம் செய்யும் போதும் வடக்கு திசை பக்கம் தலை இருக்குமாறு வைத்து வணங்கினால் அதிகப்படியான நன்மை கிடைக்கும். இப்படி செய்வதால் யாருக்கும் 
எந்த பாதிப்பும் வராது. நீங்கள் முயற்சி செய்து தான் பாருங்களேன் தொடர்ந்து இதை செய்து வரும்போது நிச்சயம் நல்ல முன்னேற்றம் உங்கள் அறியாமலேயே நடப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
அடுத்ததாக விளக்கு பரிகாரம். பொதுவாக நம் வீட்டில் கிழக்கு திசையை நோக்கித்தான் விளக்கை ஏற்றுவோம் ஏனென்றால் இந்திரன் போல் வாழ்வதற்கு கிழக்கு திசையே உகந்தது. இந்திரனின்
 திசை கிழக்கு திசை. இந்த கிழக்கு திசையோடு சேர்த்து, மேற்குப் பக்கம் பார்த்தவாறு ஒரு விளக்கையும், வடக்குப் பக்கம்
 பார்த்தவாறு ஒரு விளக்கையும், ஏற்றி வைப்பது மிகவும் நல்லதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ஏற்றப்படும் விளக்குகள் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைய
 வேண்டும். திசைகள் மாறுபாட்டாலும் விளக்கில் எறியப்படும் ஜோதியானது
 மூன்று திசைகளை பார்த்தவாறு இருந்தாலும், அந்த ஜோதி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு வைக்க வேண்டும். (நடுவில் இருக்கும் விளக்கு கிழக்கு திசை பார்த்தும், நடுவில்
 இருக்கும் விளக்கிற்கு 
இடதுபுறம் மேற்கு பார்த்த விளக்கையும், நடுவில் இருக்கும் விளக்கிற்கு வலதுபுறம் வடக்கு பார்த்த விளக்கையும் வைக்க வேண்டும்.) ஏனென்றால் மேற்கு திசை பார்த்து ஏற்றப்படும் விளக்கானது 
உங்களுக்கும், உங்கள் 
வீட்டில் இருப்பவர்களுக்கும் யோகத்தை அளிக்கும். வடக்கு பக்கம் பார்த்தவாறு
 ஏற்றப்படும் விளக்கு உங்களுக்கு வற்றாத 
செல்வ வளத்தை அளிக்கும். இந்திரன் போன்ற சுகபோக வாழ்க்கையும், எதைத் தொட்டாலும் யோகமான வெற்றியையும், கஷ்ட காலத்தில் கூட ஏதாவது ஒரு வழியில் பணம் கிடைக்கும். இவை மூன்றும் ஒருவருக்கு கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும்?என்பதாகும் 





 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.