கொழும்பு ஆமர் வீதி, பரடைஸ் பிளேஸில் அமைந்துள்ள
ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோயிலில், மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 10ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த வேளையில் காலை 7.12 முதல் 8.15 மணி வரை திருக்குட
திருமஞ்சன பெரும்சாந்தி விழா வேத ஆகம விதிப்படி நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு கடந்த 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி முதல் பல கிரியை நிகழ்வுகளுடன், 5. 6. 7. ஆகிய தினங்களில் ஹோமங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இன்று காலை 7.00 மணியிலிருந்து நாளை மாலை 3.00 மணிவரை பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்துதல் நடைபெறும்.
தொடர்ந்து நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு பூஜைகளுடன் ஆரம்பமாகி 7.12 மணியிலிருந்து 8.15 வரை மஹா கும்பாபிஷேக அபிஷேகம், தீபாராதனை, மகேஸ்வர பூஜை, பிரசாதம் வழங்கல் என்பன நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து 48 தினங்கள் மண்டல பூஜை நடைபெறும். பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஆலயத்தில் கொடுக்கலாம்.

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen