நல்லூரில் ஏழு கடல்கள்


தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கில் உள்ள நல்லூரில் வீற்றிருக்கிறார் கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேசுவரர்.
மாடக் கோயில்: இத்திருக்கோயிலின் கோபுரத்தைவிட கைலாயம் போன்று உயர்ந்து நிற்கிறது கருவறை விமானம். இதனை "கைலாய விமானம்' என்றே அழைக்கிறார்கள். இக்கோயில் ஏழாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது. மாடக் கோயிலாக விளங்குகிறது. கோட்செங்கட் சோழன் காலத்தில் இக்கோயில் பராமரிக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
பஞ்சவர்ணேஸ்வரர்: இக்கோயிலின் வாயிற்படிகள் மேற்கு நோக்கியுள்ளன. இந்தப் படிகள் திருமுறைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இதற்கு ஆண்டு தோறும் படிவிழா நடத்தப்படுகிறது.
கல்யாண சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பாணம் என்ன வகை உலோகம் என்று அறிய முடியவில்லை. ஆனால் ஒரு பகல் பொழுதில் 5 விதமான நிறங்களை வெளிப்படுத்துகிறார். இதனால் "பஞ்சவர்ணேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.