பயிற்சிகளில் பெரியது

கல்வி பயிலும் பருவம் "பிரம்மச்சரிய ஆச்ரமம்' என்று சொல்லப்படுகிறது. கலைகள் பயிலுதற்கு இளமைப் பருவமே சாலச் சிறந்தது. அதனாலேதான் "இளமையிற் கல்' என்றும் ஆணை பிறந்தது. மானுடராய்ப் பிறந்தவர் எல்லோருக்கும் இது பொதுவான நெறி. இதன்படி ஒழுக எல்லாரும் கடமைப்பட்டிருக்கின்றனர்.

பிள்ளைப் பருவம் புதிதாக வனைந்த சட்டி போன்றது. அப்போது அதன்மீது பதிப்பிக்கப்படும் உயர்ந்த எண்ணங்களும் சீரிய இயல்புகளும் என்றைக்கும் மாறாதது. மாணாக்கர்களுக்குத் தொழிற்கல்வி இன்றியமையாதது என்று இக்காலத்தில் உலகெங்கும் உள்ள அறிஞர்கள் வற்புறுத்தி

வருகின்றனர்.

இந்தியாவும் இந்த இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறது. உடல் உழைப்பை ஒட்டிய தொழில் ஆடவர், மகளிர் ஆகிய இரு பாலருக்கும் வேண்டப்படுவது என்பதும், அப்பயிற்சி இளம் பிராயத்திலேயே அளிக்கப்பட வேண்டும் என்பதும் பலர் கருத்து.
கல்வி பயிலும் பருவம் "பிரம்மச்சரிய ஆச்ரமம்' என்று சொல்லப்படுகிறது. கலைகள் பயிலுதற்கு இளமைப்

ஆனால் நம் நாட்டில் முன்பு ஒரு காலத்தில் இருந்த, இதை விட முக்கியமான பயிற்சி ஒன்றை மறந்துவிடலாகாது. அக்காலத்தைவிட இக்காலத்தில் அது பெரிதும் வேண்டப்படுகிறது. மானுட வாழ்க்கையானது பரஸ்பர உதவியை அடிப்படையாகக் கொண்டது என்னும் கோட்பாடு இந்நாளில் அறவே மறைந்து போய்விட்டது. எங்கும் ஒரே போட்டி மயம்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.