இல்லறத்தின் பெருமை

மகான் ஸ்ரீராமானுஜர், திருத்தலங்கள் பலவற்றுக்கும் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அவர், திருக்குருகூர் எனும் ஆழ்வார் திருநகரி அருகில் வந்தபோது ஓர் ஈரங்கொல்லி (துணிவெளுப்பவர்) வந்து ஸ்ரீராமானுஜரை வணங்கினார். அவர் உடனே, "யாரப்பா நீ எங்கிருந்து வருகிறாய்?' என்று கேட்டார்.


ஈரங்கொல்லி, தன்னைக் குறித்த தகவல்களை எல்லாம் சொன்னார், பின்னர், தன் குழந்தைகளை ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அழைத்தார்.

காரிமாறா, சடகோபா, வகுளாபரணா, குருகூர்நம்பி, நம்மாழ்வார், பராங்குசா என்று அவர் ஒவ்வொரு பெயராகக் கூப்பிடக் கூப்பிட, குழந்தைகள் வரிசையாக வந்து ஸ்ரீராமானுஜரை வணங்கிய வண்ணம் தரையில் படிந்து எழுந்தனர். ராமானுஜரோ கண்களில் தாரை தாரையாக நீர் பெருக நின்று கொண்டிருந்தார். ஈரங்கொல்லிக்கு ஒன்றும் புரியவில்லை. தான் ஏதாவது தவறாகச் செய்துவிட்டோமோ என்று மனத்தில் சங்கடப் பட்டார். அப்போது அருகில் இருந்த முதலிகள் ஜீயர் ஸ்வாமி "இது என்ன?' என்று கேட்டார்.
மகான் ஸ்ரீராமானுஜர், திருத்தலங்கள் பலவற்றுக்கும் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அவர்


அதற்கு ராமானுஜர் கலங்கிய கண்களுடன் சொன்னார்... ""என்ன பாக்கியம் செய்தான் இந்த ஈரங்கொல்லி? இப்படி பல குழந்தைகளைப் பெற்று, அத்தனை பேருக்கும் ஆழ்வாரின் திவ்ய நாமங்களைச் சூட்டி, நாள் ஓயாமல் வாயால் கூப்பிட்டிருக்கக் கொடுத்து வைக்காமல் இப்படி காவி தாங்கி நிற்கும்படி ஆனதே என் வாழ்வு''

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.