பன்னிரு திருமுறைகளில் முதல் திருமுறையாக அமைந்த திருப்பிரமபுரம் குறித்த ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் இது. இந்தப் பாடலில் சிவபெருமானை உள்ளம் கவர் கள்வன் என்கிறார்.
""விண்மகிழ்ந்த மதில் எய்ததுமன்றி
விளங்கு தலையோட்டில்
உண்மகிழ்ந்து பலிதேரியவந்து
எனது உள்ளங் கவர் கள்வன்
மண்மகிழ்ந்த வரவம் மலர்க்கொன்றை
மலிந்த வரைமார்பில்
பெண்மகிழ்ந்த பிரமாபுர மேவிய
பெம்மான் இவன் அன்றே''.
-வானவெளியில் மகிழ்ச்சி செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணை ஒன்றினால் எய்து அழித்ததும் அல்லாமல், விளங்கிய பிரம கபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து, எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த மலை போன்ற மார்பின் இடப் பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ என்று பாடுகிறார் சம்பந்தர்
""விண்மகிழ்ந்த மதில் எய்ததுமன்றி
விளங்கு தலையோட்டில்
உண்மகிழ்ந்து பலிதேரியவந்து
எனது உள்ளங் கவர் கள்வன்
மண்மகிழ்ந்த வரவம் மலர்க்கொன்றை
மலிந்த வரைமார்பில்
பன்னிரு திருமுறைகளில் முதல் திருமுறையாக அமைந்த திருப்பிரமபுரம் குறித்த ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் இது. இந்தப் பாடலில் சிவபெருமானை உள்ளம் கவர்
பெண்மகிழ்ந்த பிரமாபுர மேவிய
பெம்மான் இவன் அன்றே''.
-வானவெளியில் மகிழ்ச்சி செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணை ஒன்றினால் எய்து அழித்ததும் அல்லாமல், விளங்கிய பிரம கபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து, எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த மலை போன்ற மார்பின் இடப் பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ என்று பாடுகிறார் சம்பந்தர்
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen