கோவில்களில் சனிப்பிரதோஷம்

பழனி, ஜூன் 16: பழனியில் பல்வேறு சிவன் ஆலயங்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானையும், அவரை காப்பாற்றிய நந்திபகவானையும் வணங்கி மகிழும் பொருட்டு சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதோஷ தினம் சனிக்கிழமைகளில் வரும்போது மிகவும் விமரிசையாக வழிபடப்படுகிறது. பழனி சண்முகநதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள அருள்மிகு பெரியாவுடையார் கோவிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளளும் நடைபெற்றது.


பெரியாவுடையார் கோவில் மட்டுமன்றி சனிப்பிரதோஷ நிகழ்ச்சி மலைக்கோவில் கைலாசநாதர் சன்னதி, சித்தாநகர் சிவன்கோவில், பட்டத்துவினாயகர் கோவில் சிதம்பரீஸ்வரர் சன்னதி, வேலீஸ்வரர் கோவில், பெரியநாயகியம்மன் கோவில் கைலாசநாதர் சன்னதி உள்ளிட்ட பல இடங்களிலும் விமரிசையாக நடத்தப்பட்டது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.