ஜூலை 6 ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் வருஷாபிஷேக விழா

 


சாத்தான்குளம், ஜூன் 16: தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள புன்னைநகர்- வனத் திருப்பதி புன்னை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் வருஷாபிஷேக விழா ஜூலை 6-ம் தேதி நடைபெறுகிறது.
புன்னை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஆதிநாராயணர்- சிவனணைந்த பெருமாள் கோவில் 3-வது வருஷாபிஷேக விழா ஜூலை 6-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
காலை 10.15 மணிக்கு குருகிருபா கலா மந்திர் சுள்ளிமானூர் கிருஷ்ணா குழுவினரின் சிறப்பு சிங்காரி செண்டை மேளத்துடன் கலச அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு வனத்திருப்பதியானுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மேல் ஆறு உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடைபெறும்.
மாலை 6 மணிக்கு கும்பகோணம், பெருஞ்சேரி, பி.எம்.பி. முருகன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு மேல் சிறப்பு வாணவேடிக்கையும், இரவு 8.15 மணிக்கு லஷ்மன்ஸ்ருதி குழுவினரின் மெல்லிசையும் நடைபெறுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஆதிநாராயணர்- சிவனணைந்த பெருமாள் கோவில் நிறுவனர் மற்றும் நிர்வாக கைங்கர்யதாரர் பி.ராஜகோபால் தலைமையில் கோவில் மேலாளர் வசந்தன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.