முக்கூடலுக்கு வடக்கே வரதராஜன்

வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலைகளில் கமண்டல நதி, நாக நதி, செய்யாறு நதி ஆகிய மூன்று நதிகள் உற்பத்தியாகின்றன. இவை வாழைப்பந்தல் என்னும் ஊரின் அருகே கூடுகின்றன. இந்த முக்கூடலுக்கு வடக்கே சிறிது தொலைவில் உள்ளதுதான் மேல்புதுப்பாக்கம் கிராமம்.

இங்கே ஸ்ரீபெருந்தேவி சமேத ஸ்ரீகல்யாண வரதராஜப் பெருமாள் அருள்புரிகிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முதுபெரும் வைணவத் துறவி ஒருவரின் ஆலோசனையின்படி இந்தப் பெருமாள் கோயிலை புதுப்பிக்கும் பணி 1917ல் தொடங்கியது. 1919ம் ஆண்டு நிறைவுபெற்றது.

அப்போது பதினாறு கால் முன் மண்டபம், பர்மா தேக்கில் செய்யப்பட்ட கொடி மரம், அதனைச் சுற்றி செப்புத் தகடு பதித்தல், திருமதில் ஆகிய பணிகள் நடந்தன.

தற்போது கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் மறுசீரமைப்புப் பணிகளும் நடந்துவருகின்றன. 29.6.2012 அன்று மஹா சம்ப்ரோஷணம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீபெருந்தேவி சமேத கல்யாண வரதராஜப் பெருமாளை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். தீராத வியாதி தீரும். நீதிமன்ற வழக்கில் வெற்றி கிடைக்கும். பெருந்தேவி உடனான வரதராஜனை வழிபட்டு நாமும் பேரின்பம் அடைவோம்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.