பெயர்ப்பலகைகள் மீது இனந்தெரியாதோரால் பூசப்பட்ட பெயின்ற்

  மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை அபிவிருத்திப்பணிகளுக்காக திறந்துவைக்கப்படவிருந்த நினைவுக்கல் மற்றும் பெயர்ப்பலகைகள் மீது இனந்தெரியாதோர்; நேற்றிரவு பெயின்ற் பூசி சேதப்படுத்தப்படுத்தியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை ஏறாவூர் நகரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பையினால் 8 கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் திறக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல் மற்றும் பெயர்ப்பலகைகள் மீதே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.