நாளை குழுமாயி அம்மன் கோவில் குடமுழுக்கு


 
First Published : 20 Jun 2012 01:03:00 PM IST

திருச்சி, ஜூன் 19 : திருச்சி, புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
குடமுழுக்கு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, யாகசாலை பூஜைக்காக கடங்களில் நிரப்புவதற்காக காவிரி ஆற்றிலிருந்து ஏராளமான பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். மாலையில், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து, புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, இரவு மூன்றாம் கால யாக பூஜை ஆகியவை நடைபெறவுள்ளன.
குடமுழுக்கு தினமான வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று, காலை 9 மணிக்கு யாக சாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் புறப்பட்டு 9.30 மணிக்கு மூலஸ்தான விமான குடமுழுக்கு, விநாயகர், ஒண்டி கருப்பண்ணசுவாமி, ஸ்ரீ குழுமாயி அம்மன் மூலவர் ஆகிய சந்நதிகளுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேகம் தொடங்கவுள்ளது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.