ராமேசுவரம் கடல் பகுதியில் தொடரும் சூறாவளி


First Published : 20 Jun 2012 12:00:00 AM IST

சூறாவளியினால் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து, மண்டபம் துறைமுகம் மீது மோதிய ராட்சத அலைகள்.
ராமேசுவரம், ஜூன் 19: ராமேசுவரத்தில் தொடர்ந்து வீசி வரும் சூறாவளியினால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு வருவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல புதன்கிழமையும் தடை விதிக்கப்படலாம் என மீன் துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறாவளியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, கடந்த 17-ம் தேதி முதல் வங்கக் கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியதால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ராட்சத அலைகள் எழுந்தன.
இச்சூழ்நிலையில், கடலில் மீன்பிடிப்பது சிரமம் என்பதால், கடந்த 18-ம் தேதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன் துறை தடை விதித்தது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையும் வங்கக் கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு சுமார் 6 முதல் 8 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.
இந்த நிலை புதன்கிழமையும் நீடித்தால், ராமேசுவரம், மண்டபம், பாம்பன் விசைப் படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல அனுமதி டோக்கன் வழங்காமல் தடை விதிக்கப்படலாம் என மீன் துறையினர் தெரிவித்தனர்.
இதுபோன்ற சூறாவளி, கடல் கொந்தளிப்பால் எழும்பும் ராட்சத அலைகள் போன்ற நிகழ்வுகள், சுனாமிக்கு பிறகுதான் அதிகமாக ஏற்பட்டு உள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால் விபரீதம் ஏற்படும் எனவும் ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.