புரி ஜெகந்நாதர் கோவிலில் ரத யாத்திரை: லட்சக்கணக்கானோர் வழிபாடு

22 Jun 2012 புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்.
புரி, ஜூன் 21: ஒடிசா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவிலில் நடைபெற்ற ரத யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவினைக் கெடுக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகளின் அச்சம் இருப்பினும் பெரும் திரளாக மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த யாத்திரையை முன்னிட்டு "மங்கள ஆரத்தி' மற்றும் "மயிலம்' போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரத யாத்திரை திருவிழாவுக்காக அழகிய வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஜெகந்நாதர், பலபத்ரர் (பலராம்), சுபத்திரை கடவுளர்களின் ரதங்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்து வரப்பட்டன. குஜராத்தில்: ஜமால்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோவிலில் ரத யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மரபு வழிப்பழக்கமாக, ரத யாத்திரையில் உள்ள அலங்கரிக்கப்பட்ட ஜெகந்நாதர் சிலையின் பாதங்களை சுத்தம் செய்து பின் தேரை இழுத்து யாத்திரையைத் தொடங்கி வைத்தார். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ரத யாத்திரையில் ஜெகந்நாதர், பாலதேவி மற்றும் தேவி சுபதிரை கடவுளர்களின் ரதங்கள் இடம்பெற்றன.
ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்குப் பின் இந்த யாத்திரை மிகவும் புகழ்பெற்றது. குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சுமார் 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்22 Jun 2012

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.