மனிதனுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்துக்கும் சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள் ஏற்படத்தான் செய்கின்றன.
நாம் வசிக்கும் சூழலில் அல்லது வேலை செய்யும் இடங்களில் என மறக்க முடியாத சில நிகழ்வுகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது.
சிலருக்கு அந்நிகழ்வுகளே அவர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியினை வைக்கின்றது,இன்னும் சிலர் அவற்றிலிருந்து மீள்கின்றனர்.மீள்கின்ற அனைவருக்கும் அது அவர்களின் மறு பிறப்பாகத்தான் இருக்கும்.
பிரயாணத்தின் போதும், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடும் போதும், குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சந்தர்ப்பத்திலும்.ஏன் வீட்டினில் வேலை செய்யும் போதும், பிரசவத்தின் போதும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படலாம்.
பயணிகளை தாங்கிச் சென்ற விமானம் ஒன்று ஒரு அடர்ந்த காட்டினில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த ஒருத்தர் தவிர அனைவரும் இறக்கின்றனர்.
உயிர் தப்பியவர் உண்ணுவதற்கும் குடிப்பதற்கும் ஏதுமில்லாமல் புளூ பூச்சிகளை உண்டு தன்னுடைய உயிரினை காத்துக் கொள்கிறார் அதிர்ஷ்ட வசமாக சில நாட்களின் பின் மீட்புப் பணியினரால் அல்லது வேறு சிலரால் அவர் உயிருடன் மீட்கப்படுகின்றார். இது இணையத்தில் அண்மைக் காலமாக அதிகமாக பேசப்பட்ட சம்பவம் ஒன்றின் சாரம்.
அதே போன்று இலங்கை மீனவர்கள் சிலர் படகின் இயந்திரக் கோளாரினால் நடுக்கடலில் சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.படகில் சென்றவர்கள் தினந்தினம் ஒவ்வொருவராக இறக்கின்றனர்.ஆனால் ஒருவர் மட்டும் உயிர்பிழைக்கின்றார். தன்னோடு வந்தவர்கள் தன் கண்முன்னே உண்பதற்கு எந்தவித உணவுப் பொருளுமில்லால் ஒருவர் பின் ஒருவராக இறப்பதைப் பார்த்த அவருடைய மனது எவ்வாறு பேதலித்திருக்கும்.
இச் சப்பவங்கள் பற்றி பின்னர் அவரிகளிடம் யாராவது கேட்டால் அவர்கள் அது தங்களுடைய மறு பிறப்பே என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்களினால் அச் சம்பவங்களை மறக்க முடியாது.
அதிர்ஷ்டவசமாக இவ்வாறான சம்பவங்களில் இருந்து பிழைப்பவர்கள் நிச்சயமாக அவர்களின் சொந்த முயற்சிகொண்டு அவர்களாகவே தப்பவில்லை.அவர்களின் சக்தியையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது அதுதான் அவர்கள் தப்புவதற்கு உறுதுனையாக அமைந்தது. அதுதான் இறைவனுடைய விதி.
விதியை விஞ்சிய செயல் என்று எதுவும் இல்லை இந்த பூவுலகில்.
எனவே இந்த பூவுலகில் (பூமியில்) மறுபிறப்பாக நாம் பிறப்பதற்கு மரணிக்கத் தேவையில்லை .அது நாம் உயிருடன் இருக்கும் போதே நிகழ்கின்றது.அணுதினமும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் மூலம் மறுபிறப்பாக பிறக்கின்றோம்.
உண்மையில் மறுபிறப்பு என்பது உண்டு ஆனால் அப்பிறப்பின் மூலம் மனிதனோ அல்லது விலங்குகளோ இந்த பூமிக்குத் திரும்புவதில்லை.
நாம் மறுபிறப்பின் மூலம் திரும்பும் உலகிக்கு செல்வதற்கு இரண்டு விதமான செயல்கள் தேவை அவைதான் நன்மையும் தீமையும் நன்மை அதிகமாக செய்தவர்கள் சொர்க்கம் எனும் உலகிக்கு மறுபிறப்பாகவும் தீமையினை அதிகமாக செய்தவர்கள் நரகம் எனும் உலகிக்கு மறு பிறப்பாகவும் அனுப்பப்படுகின்றனர்.
இதுதான் இறைவனின் விதி.




0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen