திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை திருவிழா



First Published : 18 Jun 2012 01:25:08 AM IST

கிருத்திகை திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான். (வலது படம்) விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.
திருத்தணி, ஜூன் 17: திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிருத்திகை திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
÷அறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வேன், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகின்றனர்.
÷அதேபோல் சென்னை, ஆவடி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டு செல்கின்றனர்.
÷இந்நிலையில் திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை திருவிழா நடைபெற்றது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.