கர்நாடக இசை உலகின் முக்கியப் புள்ளிகள் சிலரின் நூற்றாண்டு விழாக்களுக்கு, கிருஷ்ண கான சபாவின் பாலக்காடு மணி அய்யரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, பிள்ளையார் சுழி போட்டுவிட்டது. (வரவிருப்பவை, மதுரை மணி, டி. பிருந்தா நூற்றாண்டு விழாக்கள்பாலக்காடு மணி அய்யரைப் பொறுத்தவரை, அவர் மகன் ராஜாமணியும், ராஜாராமும் தொகுத்து வைத்திருக்கிற மாதிரி, வேறு எந்த சங்கீதக் குடும்பமும் ஆவணங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. மணி அய்யரே எழுதிய டைரிக் குறிப்புகள், அவர் சொல்லச் சொல்ல எழுதி வைத்த நிகழ்ச்சிக் குறிப்புகள், ஏராளமான புகைப்படங்கள் என்று இந்த இரட்டையர் வைத்திருக்கும் பொக்கிஷம் வேறு எந்த இசைக் கலைஞர் குடும்பத்திலாவது பாதுகாக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.
மணி அய்யரின் கச்சேரிகள் சிலவற்றை வர்ணம் முதல் மங்களம் வரை சின்னச் சின்ன அங்கங்களாகத் தொகுத்து, எத்தனை எத்தனை இசைக் கலைஞர்களுக்கு இவர் மிருதங்கம் வாசித்து, புகழின் உச்சியைத் தொட்டார் என்ற ராஜாமணியின் குறும்படம் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஓடினாலும், அந்தக்கால வித்துவான்களின் குரலையும், பாணியையும் சலிக்காமல் கேட்க முடிந்தது. எந்த இசைக் கலைஞரானாலும், மணி அய்யரின் மிருதங்கம் அந்த இசையோடு இணைந்து கைகோத்துக்கொண்டு நடை போடுவதை ரசிக்க முடிந்தது.
பரிசாகக் கிடைத்த மிருதங்கம்: சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியவர் குரு காரைக்குடி மணி. இவருக்கு பாலக்காடு மணி, மானசீக குரு. காரைக்குடியில் எங்கள் வீட்டுக்கு எதிரேதான் அரியக்குடி வந்து தங்கினார். என் தகப்பனார் என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். நான் படித்துக்கொண்டிருந்தேன். மிருதங்கமும் கற்றுக்கொண்டிருந்தேன். அன்று மாலை தியாகராஜ உற்சவத்தில் என்னையும் வரச் சொன்னார். அங்கே பஞ்சரத்தினம் பாடிக்கொண்டிருந்தார்கள். நான்கு ரத்தினங்கள் முடிந்துவிட்டன. ஐந்தாவது தொடங்குவதற்கு முன்னால், அரியக்குடி, மணி அய்யரிடம் இந்தப் பையன் எனக்கு மிகவும் வேண்டிய பையன். இவன் மிருதங்கம் வாசிக்கட்டுமே என்றார்

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen