
தவறிழைக்கும் சாரதிகளின் அனுமதிப்பத்திரத்திற்கு புள்ளிகளை வழங்கும் சட்டத்தை கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்க வாகனப் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்தப் புதிய சட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் இது தொடர்பான சட்டத்தை முன்னெடுக்க மாதிரியொன்று முன்வைக்கப்பட்டு அதனை பொலிஸ் திணைக்களத்தில் காட்சிப்படுத்தி அதன் குறைபாடுகளை தீர்க்கவுள்ளதாகவும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எச்.ஹரிச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
மது போதையில் வாகனங்களைச் செலுத்துவதால் விபத்துகள் இடம்பெறுகின்றன. இது போன்ற குற்றங்களுக்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதனால் புதிய சட்டத்தின் படி 24 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை ஒரு வருட காலத்திற்கு தடை செய்வதற்கான கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen