மறைந்து போன மனம்


உங்க போன் நம்பரை கொஞ்சம் சொல்லுங்க... என்று நண்பரோ, தெரிந்தவர்களோ கேட்டால் உடனடியாக நம்மால் கூற முடியுமா?
ஏறக்குறைய சந்தேகம்தான். ஒரு நிமிஷம் இருங்க என்றவாறு தனது அலைபேசியைத் திறந்து அதில் எண்ணைப் பார்த்துக் கூறக்கூடிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இது அலைபேசிக்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களிலும் இன்று இதுதான் யதார்த்தம். அந்த அளவுக்கு மனதையும், நேரத்தையும் சுருக்கிவிட்டோம். இப்படியே போனால் இந்தச் சோம்பல் நம்மை எங்கு கொண்டு போய்விடுமோ என்று தெரியவில்லை.
இன்று பல்கிப் பெருகிவிட்ட இணையதளங்கள், நவீன தொலைத் தொடர்புச் சாதனங்கள் மக்களை படுசோம்பேறியாக்கவிட்டதுடன் மெல்ல மெல்ல தங்களையே மாற்றிவிட்டது.
அண்மையில் வெளியான ஓர் ஆய்வில், இந்தியர்களுக்கு மறதி நோய் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. "அம்னீஷியா' என்றழைக்கப்படும் இந்த மறதி நம்மை ரொம்பவே குழப்பிவிடுகிறது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.