கிருத்திகை திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான். (வலது படம்) விழாவில் 18 கலந்து கொண்ட பக்தர்கள்.
திருத்தணி, ஜூன் 17: திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிருத்திகை திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
÷அறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வேன், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகின்றனர்.
÷அதேபோல் சென்னை, ஆவடி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டு செல்கின்றனர்.
÷இந்நிலையில் திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை திருவிழா நடைபெற்றது.
÷விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மூலவ முருகப்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. ÷அதைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
÷பின்னர் காலை 10.30 மணிக்கு உற்சவ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கிருத்திகை திருவிழா ஞாயிற்றுக்கிழமை வந்ததால் மேற்குறிப்பிட்ட ஊர்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காலை 6 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வந்து குவிந்தனர்.
÷பொது வழியில் சென்ற பக்தர்கள் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் வழிபட்டனர்.
போக்குவரத்து நெரிசல்
÷கிருத்திகை விழாவில் மலைக்கோயிலில் மேற்குறிப்பிட்ட ஊர்களில் இருந்து வந்த கார், வேன், பஸ், லாரி ஆகிய வாகனங்கள் மலைக்கோயில் வந்து குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
÷சில வாகனங்கள் மலைக்கோயிலுக்கு வரும் வழியிலேயே சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருத்தணி போக்குவரத்து போலீஸôர் மலைக்கோயிலுக்கு வந்து 1 மணி நேரம் போராடி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.÷விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையர் ந.தனபால் மற்றும் பேஷ்கார் சுப்பிரமணியம் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen