- ஐந்தருவிச் சித்தர் சுவாமி சங்கரானந்தா
22 Jun 2012 தாந்தக் கொள்கையின்படி இரண்டு விதமான ஆத்ம சாதனைகள் மூலம் ஞானத்தைப் பெறலாம். அகம் பிரம்மாஸ்மி, அயம் ஆத்மா பிரம்மம், பிரக்ஞானம் பிரம்மம், தத்வமஸி எனும் மகாவாக்கிய விசாரணை மூலம் ஞானத்தை அடைவது ஒருமுறை.
சிவயோக சாதனையால் பிராணனை வசப்படுத்தி பஞ்ச பூதங்களையும், தொடர்ந்து ஐம்புலன்களையும் வென்று, மனதை வயப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் விசாரணையின் வழியால் ஞானத்தைப் பெறுவது இரண்டாவது முறை.
இவற்றுள் எது சிறந்தது?
பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கைலாய யாத்திரை சென்ற வேளையில் ஜோஷி மடத்திலிருந்து 60 மைல் தூரத்தில் உள்ள ஓர் இடத்தில் சந்தித்த ஞான சித்தர் ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்டேன்.
அவர் கொடுத்த விளக்கம் மிக அற்புதமாக இருந்தது. அவர் ஓர் உவமை மூலம் இப்பேருண்மையை எனக்கு விளக்கினார்.
கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பெற்ற இனிப்புப் பண்டங்களை நோக்கி இருவர் செல்கின்றனர்.
ஒருவன் பெட்டியின் அருகில் செல்கிறான். உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்களை உற்று நோக்கி இன்னின்ன பொருட்கள் எனப் புரிந்து கொள்கிறான். ""இவ்வளவுதானா?'' என அலட்சியமாகக் கூறிவிட்டுத் திரும்பிவிடுகிறான்ஐந்தருவிச் சித்தர் சுவாமி சங்கரான
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen