சிலியின் மலைப் பிராந்தியத்தில் 46 வருடங்களாக தனிமை வாழ்க்கை

12.07.2012சிலியில் ஏரிகள் நிறைந்த பனியால் சூழப்பட்ட மலை உச்சியில் தன்னந் தனியாக 46 வருடங்களுக்கு மேலாக நபரொருவர் வாழ்ந்து வரும் விசித்திர சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போஸ் ரினோ பர்ரியன் போஸ் (81 வயது) என்ற இந்த நபர் உலகின் மிகவும் பின்தங்கிய இடங்களிலொன்றான ஒஹிக்கின்ஸ் எரிக்கரைப் பிராந்தியத்தில் 1965ஆம் ஆண்டிலிருந்து வசித்து வருகிறார்.

தனது தனிமை வாழ்க்கை தொடர்பில் போஸ் ரினோ விபரிக்கையில்,"எனக்கு இங்கு வாழ்வதற்கு பணம் தேவைப்படவில்லை. இங்கு எனக்கு உண்பதற்குப் போதுமான உணவு கிடைக்கிறது. தனிமையில் நீங்கள் வாழும் போது, வாழ்வு சிறப்பாக இருப்பதைக் காண்பீர்கள்" என அவர் தெரிவித்தார். ஒஹிக்கின்ஸ் ஏரிக்கரையில் தனது 11 சகோதரர்களுடன் வளர்ந்த போஸ் ரினோ, தனது குடும்பத்தினர் ஆர்ஜென்டீனாவுக்குச் சென்றதையடுத்து மேற்படி பிராந்தியத்தில் தனிமையில் வாழ்கிறார்.

இரு குடிசைகளில் வாழும் போஸ் ரினோ, ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளையும் குதிரைகளையும் வளர்த்து வருகின்றார். அத்துடன் படகில் சென்று மீன் பிடிப்பதிலும் அவர் ஈடுபடுகிறார். அது மட்டுமல்லாது அவர் வருடத்திற்கு இரு தடவை புதினத் தாள்களை மொத்தமாக வரவழைத்துப் பெற்றுக் கொள்கிறார். அவர் இரு வருடங்களுக்கு ஒரு தடவை ஒஹிக்கின்ஸ் ஏரிக்கரையில் அவரது இருப்பிடத்திலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள குக்கிராமத்துக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.