மருத்துவமனையின் அலட்சியப் போக்கு: பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

25.07.2012
மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப் போக்கு காரணமாக, பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இத்தாலி ரோம் நகரில் உள்ள ஆஸ்டியா நகர மருத்துவமனையில், பிலிப்பைன்சை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததால், உடனடியாக சான் ஜியோவன்னி மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிவந்த குழந்தை, கடந்த மாதம் 29ஆம் திகதி திடீரென இறந்தது.
இதுகுறித்து விசாரித்த போது, குழந்தைக்கு சலைன் செலுத்துவதற்கு பதில், ஊசி மூலம் பால் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் குழந்தை இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து இத்தாலி சுகாதாரத் துறை அமைச்சர் ரெனாட்டோ பால்டுசி கூறுகையில், குழந்தை பராமரிப்பில் அலட்சியம் காட்டிய மருத்துவமனை ஊழியர்கள் 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் உட்பட எல்லோரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.