வட,கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக இம்முறை அதிகமான முருக பக்தர்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இம்முறை பெருமளவிலான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக கதிர்காமத்திற்குச் செல்கின்றனர்.
கதிர்காமம் முருகன் ஆலயக் கொடியேற்றம் இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதனை முன்னிட்டு பெருமளவிலான முருக பக்தர்கள் நேர்த்திக்கடன் பொருட்டு பாதயாத்திரையாக் சென்று கொண்டிருக்கின்றனர்.
கிழக்கில் சிறு சிறு குழுக்களாக இனையும் முருக பக்தர்கள் தற்போது மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பிரதான பாதைகளுடாக செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாக அங்கிருக்கு எமது பிராந்திய செய்தியாளர் எம்.எம்.பர்ஹான் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் குழுவினர் உகந்தை முருகன் ஆலயத்தைச் சென்றடைந்து காட்டுவழி ஊடாக கதிர்காமத்தைச் சென்றடையவுள்ளனர்07.07.2012

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.