இராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 2,500 பேரை கட‌ற்படை‌யின‌ர் ‌விர‌ட்டியடி‌த்ததாக குற்றச்சாட்டு _

07.07.2012  க‌ச்ச‌த்‌தீவு அருகே இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌யி‌ல் ‌மீ‌ன்‌‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த இராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 2,500 பேரை இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌விர‌ட்டியடி‌த்ததாக இந்திய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இராமநாதபு‌ர‌ம் மாவ‌ட்ட‌ம், இராமே‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த 2,500 ‌மீனவ‌ர்க‌ள் 600 ‌விசை‌ப்படகுக‌ளி‌ல் நே‌ற்று மாலை ‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். க‌ச்ச‌த்‌தீவு அருகே இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌யி‌ல் அவ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பி‌டி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.
இ‌ன்று காலை 5 படகுக‌ளி‌ல் வ‌ந்த கட‌ற்படை‌யின‌ர் ‌மீனவ‌ர்களை க‌த்‌தி முனை‌யி‌ல் ‌மிர‌ட்டியதோடு, வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்தன‌ர். மேலு‌ம் படகுகளை சேத‌ப்படு‌த்‌தியதோடு ‌மீ‌ன்களையு‌ம் கொ‌ள்ளையடி‌த்தன‌ர்.
உடனடியாக அ‌ங்‌கிரு‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் அனைவரு‌ம் வெ‌ளியே‌றின‌ர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.