
வாணியம்பாடி- ஜண்டாமேடு பகுதியில் குரங்குகள் திரிந்து வருகின்றன. அவைகள் ஒவ்வொரு கட்டிடத்துக்கு தாவி சென்று விளையாடும். இதை அப்பகுதி மக்கள் சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்து செல்வார்கள்.
இதேபோல் நேற்று காலை 2 குரங்குகள் ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்துக்கு தாவின. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் 2 குரங்குகளும் சிக்கி கொண்டன. இதில் மின்சாரம் பாய்ந்து குரங்குகள் அலறின.
இதை பார்த்த பொதுமக்கள் குரங்குகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. 2 குரங்குகளும் பரிதாபமாக இறந்தன. தெய்வமாக வணங்கபடும் குரங்குகள் இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இரண்டு குரங்குகளின் உடல்களுக்கு மாலை அணிவித்து வாழைப்பழம் வைத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
குரங்குள் இறந்தது பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். குரங்குகளை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen