எஜமானின் கல்லறைக்கு அருகில்

 6 வருடங்களாக வாழும் நாய்: மனதை உருக்கும் சம்பவம் ByxRajah.




ஆர்ஜன்டீனாவில் மறைந்த தனது எஜமானின் கல்லறைக்கு அருகில் 6 வருடங்களாக வாழ்ந்து வரும் நாயொன்று குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.


அந்நாயின் பெயர் ' கெப்டன்' ஆகும்.


இது குறித்துத் தெரியவருவது.


ஆர்ஜன்டீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விலா கார்லொஸ் பாஸ் நகரில் வசித்து வந்த மிகுவல் கஸ்மென் என்ற நபர் கடந்த 2006 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.


இதன்பின்னர் கெப்டன் திடீரெனக் காணமல் போயுள்ளது.


கஸ்மென் மறைந்து ஒருவாரத்துக்கு பின்னர் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவதற்காக கல்லறைக்குச் சென்றுள்ளனர்.


இதன்போது அவர்கள் வளர்த்த நாய் கல்லறைக்கு அருகில் கவலையுடன் படுத்திருப்பதனைக் கண்டுள்ளனர்.


அன்று முதல் அந்நாய் தனது எஜமான் கல்லறையிலிருந்து வெளியே வருவதைக் கண்டது மிகக் குறைவு என மிகுவல் கஸ்மெனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


அவர்கள் 'கெப்டனை' தங்கள் வீட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்த போதும் அது வர மறுத்து விட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.




தற்போது கெப்டனுக்கு உணவளித்து வருவது அக்கல்லறை அமைந்துள்ள மயானத்தின் பராமளிப்பாளர்களே எனத் தெரிவிக்கப்படுகின்றது.


கஸ்மென் அந்நாயை தனது மகனுக்குப் பரிசளிக்கும் பொருட்டு கடந்த 2005 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.


அதற்கு அடுத்தவருடமே அவர் உயிரிழந்துள்ளார்.





மனதை உருக்கும் இச்சம்பவமானது டோக்கியோ ரயில் நிலையத்தில் 1925 மே மாதம் முதல் சுமார் 9 வருடங்கள் வேலைக்கு சென்ற தனது எஜமான் உயிரிழந்ததை அறியாமல் அவர் வரும் வரை தினசரி அங்கு வந்து காத்திருந்த 'ஹச்சிகோ' என்ற நாயின் கதையை ஒத்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.