பிறைநிலவைச் சடையில் பின்னியவன்
நிறை கங்கையை உச்சியிலணிந்தவன்.
மறைமுதல்வன் பாம்பு மாலையாளன்
கறையான நீலகண்டம் அமைந்தவன். (பிறை)
நிலைகுலையும் நேரமென் நெஞ்சம்
அலையா தமைதி தரும் அமலன்!
உலையாதுலகோர் உயர்ந்து வாழ்ந்திட
விலையாகப் பக்தி மட்டும் விரும்புவான். (பிறை
உமையொரு பாகமாயுலகை ஆள்பவன்.
இமைப் பொழுதுமென்னைத் தினமுமாள்பவன்
சுமையென பக்தனையெண்ணாத அற்புதன்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen