ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொதுஇடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர்.
கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இப்பூஜை செய்வர்.
குமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியில் அமைந்துள்ள ஒளவையார் கோவிலில் விசேஷமாகக் செய்யப்படுகிறது. செல்வச்செழிப்புடன் வாழ இந்த பூஜை வழிசெய்வதாக பெண்களின் நம்பிக்கை
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen