இடமாற்றம் கிடைக்க எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்???

நல்ல காலம் வந்தாச்சு..!!!.
கேள்வி:– என் மகனின் ஜாதகத்தை அனுப்பி வைத்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் வரன் அமையவில்லை. என் மகனுக்கு எப்பொழுது திருமணம் முடியும். அவன் வெளி மாநிலத்தில் உள்ள பாதுகாப்புத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். நமது பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் அது நடைபெறவில்லை. எப்பொழுது இடமாற்றம் கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? –(ஏ.ராமன், சென்னை).
பதில்:– தாங்கள் புதல்வர் ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளது. ராகு–கேதுக்களுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் இருக்கின்றன. லக்னமும், சந்திரனும் மட்டும் தனியாக இருக்கிறது. புதன், சுக்ரன், சூரியன், சனி, குரு ஆகிய ஐந்து கிரகங்களும் கூட்டு கிரகமாகி அஷ்டமத்தில் இடம் பெற்றிருக்கின்றன. தற்சமயம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் முடிந்துவிட்டது. எனவே இனி இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதே நேரத்தில் குரு ஜூலை 2015–ல் ஜீவன ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அதன் விளைவாக ஜூன் மாதத்திலேயே உங்களுக்கு இடமாற்றம் சம்பந்தமாக நல்ல செய்திகள் வந்து சேரும்.
அதே நேரத்தில் அஷ்டமஸ்தானம் வலுப்பெற்று இருப்பதாலும் சூரியனும், சனியும் இணைந்திருப்பதாலும், காரியங்கள் தாமதமாகவே நடைபெறும் சூழ்நிலை உண்டு. எனவே சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது. ராசிக்கட்டத்தில் இருப்பதைக் காட்டிலும், நவாம்சக் கட்டத்தில் ராகு–கேதுக்களின் பலம் அதிகமாக இருக்கின்றது. பாம்பு கிரகங் களுக்கு மத்தியில் அனைத்து கிரகங்களும் அடங்கி இருக்கின்றது. எனவே சர்ப்ப சாந்தி செய்வது உகந்தது. சகட யோகம் இருப்பதால் வேலை – மாலை இரண்டும் விரைவில் உங்கள் எதிர்பார்ப்புப்படி நிறைவேறும்.
கேள்வி:– எனது புதல்வரின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். லக்னத்தில் கேதுவும், சனியும் இருக்கிறது. 7–ம் இடத்தில் ராகு இருக்கிறார். எனவே நாக ஸ்தலங்களுக்கெல்லாம் சென்று வந்தோம். என் மகனுக்கு வேலை நிரந்தரமில்லாமல் இருக்கின்றது. எப்பொழுது வேலை நிரந்தரமாகும்? –(பி.பாலசுப்ரமணியம், சேலம்).
பதில்:– தாங்கள் அனுப்பிய ஜாதகத்தில் உத்தியோக ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருக்கிறார். சந்திரா ராசி அடிப்படையில் பார்க்கும் பொழுது உத்தியோக ஸ்தானாதிபதியுடன் கேது இணைந்திருக்கிறார். எனவே தான் வேலை நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்சமயம் அர்த்தாஷ்டம சனியின் ஆதிக்கமும் நடைபெறுகிறது. எனவே சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளச் சொல்லுங்கள். அவ்வாறு செய்து வந்தால் ஜூன் மாதத்திற்கு மேல் பணி  நிரந்தரம் ஏற்படும்.

கேள்வி:–   எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பெரியவள் எம்.பி.ஏ படிக்கிறாள். அவளுக்கு வேலை கிடைக்குமா? தோஷமான ஜாதகம் என்று சொல்கிறார்கள். திருமணமும் தாமதம் ஆகும் என்றும் கூறுகிறார்கள். எப்பொழுது திருமணம் நடைபெறும்? –(எஸ்.சுவாமிநாதன், சென்னை).
பதில்:– தாங்கள் அனுப்பிய ஜாதகப்படி பார்க்கும்போது, உங்கள் மகளுக்கு தற்சமயம் ஏழரைச் சனி விலகிவிட்டது. படிப்பு ஸ்தானம் நன்றாக இருப்பதால் எம்.பி.ஏ படித்து முடித்துவிடுவார்.
 உத்தியோக ஸ்தானாதிபதியும் பலம் பெற்றிருப்பதால் உடனடியாக வேலை கிடைத்துவிடும். திருமணத்தைப் பொறுத்தவரை சர்ப்ப தோஷம் இருப்பதால், கொஞ்சம் தாமதமாகத் திருமணம் செய்வதே நல்லது. 24 வயதிற்கு மேல் திருமணம் கைகூடிவரும். திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் பொழுது ராகு–கேதுக்களின் ஆதிக்கம் பார்த்து திருமணம் செய்வது நன்மை பயக்கும்.
கேள்வி:–  எனது புதல்வியின் ஜாதகத்தை
 அனுப்பி வைத்துள்ளேன். அவளுக்கு வயது அதிகமாகிவிட்டது. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. பல கோவில்களுக்குச் சென்று பரிகாரமும் செய்து விட்டோம். இன்னும் திருமணம் கைகூடி வரவில்லை. எப்பொழுது திருமணம் முடிவடையும் என்பதை தெரிவிக்கவும். வீடு கட்டும் பாக்கியம் உள்ளதா? – (கே.சிவகாமி, பண்ருட்டி).
பதில்:– தங்கள் புதல்வியின் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு நீச்சம் பெற்றிருக்கிறார். களத்திர ஸ்தானத்தில் சூரியனுடன் கேது இருக்கிறார். எனவே தான் திருமண முயற்சிகளில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் களத்திர ஸ்தானாதிபதி புதன் சூரியனோடும் சுக்ரனோடும் சொந்த வீட்டில் இணைந்திருப்பதால், புத–சுக்ர யோகமும், புத–ஆதித்ய யோகமும் இருக்கின்றது. எனவே திடீரென திருமணப் பேச்சுகள் வந்து முடிவாகலாம். வீடுகட்டும் யோகத்தை காட்டிலும், கட்டிய வீடாக வாங்கும் யோகமே அதிகமாக உள்ளது.
கேள்வி:– என் மகன் தற்பொழுது பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். மேற்படிப்பு எம்.எஸ். அல்லது எம்.பி.ஏ படிக்க விரும்புகிறான். வெளிநாட்டிற்குச் சென்று படிக்கும் யோகம் உள்ளதா? அவன் பிற்காலத்தில் செல்வச் செழிப்போடு வாழ்வானா? –(ந.கோகுல்ராஜ், அரும்பாக்கம்).
பதில்:– தங்கள் புதல்வர் ஜாதகத்தில் படிப்பு ஸ்தானம் நன்றாக இருக்கிறது. படிப்பு ஸ்தானாதிபதியுடன் குரு கூடியிருக்கிறார். ஜல லக்னத்தில் பிறந்திருக்கிறார். எனவே வெளிநாடு சென்று எம்.எஸ் படிக்கும் வாய்ப்பு உண்டு. லக்னாதிபதி 8–ல் இருப்பதால், அன்னிய தேசத்திலேயே தொடர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு அமையும். நவாம்ச அடிப்படையில் மாதாகாரகன் சந்திரனும், பிதாகாரகன் சூரியனும் சஞ்சரிக்கும் விதம் சிறப்பாக இருப்பதால், பெற்றோர் சொல்படி நடந்து கொள்வார்.
கேள்வி:–  எனது புதல்வி தற்சமயம் பி.காம் படித்துக் கொண்டிருக்கிறார். ஐ.சி.டபுள்யூ.ஏ.டி போன்ற மேற்படிப்புகள் படிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டா?. படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்யலாமா? அல்லது இடையில் வரும் திருமணத்தை பேசி முடிக்கலாமா? –(செந்தமிழ்செல்வி,
 திருமங்கலம்).
பதில்:– தங்கள் புதல்வியின் ஜாதகத்தில் படிப்பு ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு புதனும் இணைந்திருக்கிறார். எனவே தங்கள் புதல்வி மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு உண்டு. படித்து முடித்த பின்னரே திருமணம் செய்யும் யோகம் வந்து சேரும்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.