பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலராஜா கயூரன் .20.05.15.


நவற்கிரி யை பிறப்பிடமாகவும் வசிப்பிடமா கவும் கொண்ட 
திரு.பாலராஜா கயூரன் .அவரகளின்  பிறந்த நாள் இன்று.20.05..2015.இவர்தனது பிறந்தநாளை உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு அப்பா அம்மா   சகோதரர்கள் 
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றனர்.
உன்  அம்மா வாங்கி வந்த 
அழகு முத்தாரம்! 
தவமிருந்து பெற்றுக்கொண்ட 
அமுதக் கிண்ணம்! 
உன்  அன்னையின் துயரம் நீக்கிய 
குட்டி அரசன்! 
உன் அப்பாவின் சுமை தாங்கிய 
சுட்டிக் கடைக்குட்டி! 
இச்சிறு வயதில் உன் 
பண்பிலும்,சிக்கனத்திலும் 
என்னை நீ வியக்க வைக்கிறாய்! 
உன் அதிரடிப் பேச்சில் 
பயந்து தான் போகிறேன் நான்! 
உன் பொறுப்பினைக் கண்டு 
பூரித்து தான் போகிறேன் நான்! 
கல்லூரி முடிந்து வரும் வேளையில் என் 
களைப்பை ஆற்றிட நீ தரும் தேநீர் 
கரும்பினும் இனிமையாகும் 
என்மீதான 
உன் பாசத்தினாலே! 
மனமுடைந்து போகும் வேளையில் 
மனதிற்கு இதமான உன் பேச்சு 
நம்பிக்கை ஊட்டிடும் நல் மருந்து எனக்கு! 
என் உடல் நலனிலும் 
உடையிலும் அக்கறை காட்டும் 
இன்னொரு அப்பா நீ! 
உன் பாசத்தினை வெளிப்படுத்தத் 
தெரியா குட்டி ராட்சசன் நீ! 
அன்பினால் நம் வீட்டை ஆளும் 
இளவல் நீ! 
உன் கல்வி சிறக்க 
உடல் உள நலமுடன் வாழ்ந்திட 
இறைவனை வேண்டுகிறேன்! 
எனதினிய 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
சின்னவனே!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.