செல்வச் சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா 28.08.15


 யாழ் செல்வச் சந்நிதி முருகனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று 28.08.2015வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகின்றது. நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
அடியவர்களால் அன்னதானக் கந்தன் என்று அழைக்கப்படும்ஆலயத்தின் திருவிழாவிற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வெள்ளம் அலைமோதும் என்பதனால் ஆலயச் சூழலில் நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, அச்சுவேலி ஆகிய பொலிஸ் 
நிலையங்களின் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சாரணர்கள் முதலுதவிப் படைப்பிரிவனர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூர இடங்களில் இருந்த வரும் அடியார்களின் நலன் கருதி ஆலயச்சூழலில் தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்தில் உள்ள மடங்களில் அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆலயத்திற்கு வரும் அடியார்களின் போக்குவரத்து வசதி கருதி பருத்தித்துறை டிப்போவினால் 30 மேற்பட்ட 
பஸ் வண்டிகள் சேவையில் 
ஈடுபடுத்டதப்படவள்ளதெனவும், சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வட்டுக் கோட்டை போன்ற பகுதிகளுக்கான பயணிகள் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்வண்டிகளும் ஆலயத்திற்குச் சென்று தமது சேவையைத் தொடரும் போக்குவரத்துச் சபையினர் 
கூறியுள்ளனர்.
நேற்று இரவு சப்பறத் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான பறவைக் காவடிகளும், இழுவைக் காவடிகளும் நேற்று நள்ளிரவு வரை ஆலயத்தை நோக்கி வந்ததனைக் காணக் கூடியதாக இருந்தது

இங்குஅழுத்தவும் தெல்லிப்பழை துர்க்கையம்மன் சப்பறத் திருவிழாவின் நிழல் படங்கள் இணைப்பு >>>

இங்குஅழுத்தவும் சந்நிதி முருகன் தேர்புகை படங்கள் காணொளிகள் இணைப்பு >>>









0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.