காணும் காட்சி.
சிந்தையை சீராக்கும் எம் சீராளன்
ஸ்ரீஸ்ரீனிவாசன் சிங்காரபவனி வர
சித்திரத் தேர் செய்தோம்
அன்பர் எல்லாம் சூழந்து வர
அடியவர்கள் பாடிவர
காவடிகள் ஆடிவர
கருடனும் தன் நிழல் தந்து பறந்துவர
பொன்பதியின் கூர்ம நாதன்
ஸ்ரீஸ்ரீனிவாசன் கலியுகவரதன்
எம் சங்கடம் நீக்க சித்திரமாய்
பவனிவர இருக்கும் காட்சி காகாண
விரைந்து வாரீர்..
வைகுந்தம் நாம் அறியோம்
ஸ்வர்க்கமும் நாமறியோம்
மறுவுலகில் தானே இவை கிட்டும்.?
ஸ்வர்ணபுரி வந்திட்டால்..
இம்மையிலும் வைகுந்தம் ஸ்வர்க்கம்
நீவிர் காண்பீர்!!!
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen