நல்லை கந்தன் தேர் உற்சவ பெருவிழா 11.09.15

இலங்கையில் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா (11.09.2015) அன்று  பக்திபூர்வமான முறையில் நடைபெறுகிறது.  காலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெறுவதுடன் மங்கள வாத்தியங்களுடன் ஆலய உள்வீதி வலம் வந்து  திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளுவார்.
நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்றலில் அமைந்துள்ள தேர்முட்டியிலிருந்து திருத்தேர் புறப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலயத்தின் திருவீதி உலாவந்து நிலையை வந்தடையும்.

திருத்தேர் நிலையை வந்தடைந்ததும் பச்சைசாத்தி சுவாமியை ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வதுடன், பிராயச்சித்த அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விசேட பூஜைகளும் நடைபெறும். இன்று மாலை 6 மணிக்கு வழமைபோன்று சுவாமியின் திருவீதி உலாவும் நடைபெறும்.

இன்று நடைபெறும் தேர்த்திருவிழாவில் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் இலங்கையின் நாலா புறத்திலிருந்தும் 6 லட்சத்துக்கும் அதிகமான அடியார்கள் பங்கேற்பரென எதிர்பார்க்கப்படுகிறது.
முருகனிடம் அருளைப் பெற்றுக் கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார.

நேற்றையதினம் நடைபெற்ற நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன்,

 12.09.2015.அன்று  25ஆவது திருவிழாவாக தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.
 காலை 7 மணிக்கு உள்வீதியிலுள்ள தீர்த்தக் கேணியில் தீர்த்தத் திருவிழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுவாமி 
வெளிவீதி வலம் வரும். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், திங்கட்கிழமை வைரவர் மடையுடன் நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்
.      தேர்த்திருவிழா நிழல் படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>










0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.