யாழ் நல்லூர் கந்தனின் தீர்த்த திருவிழா .01.09.16

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் அருளல் தொழிலைக்குறிக்கும் தீர்த்தோற்சவத் திருவிழா.01.09.2016. இன்று வியாழக்கிழமை காலை மிகவிமரிசையாக இடம்பெற்றது.
சண்முக தீர்த்தத்தில் வேற்பெருமானுக்குப் பஞ்ச கெளபியங்களால் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து வேற்பெருமான், விநாயகர்,வள்ளி, தெய்வானை, சண்டேஸ்வரப் பெருமான் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தீர்த்தமாடிய பின் உள்வீதி, வெளிவீதி உலா வலம் வந்து பக்தர்களுக்கு
 அருள் பாலித்தனர்.
பஞ்ச மூர்த்திகளும் வண்ணப் பட்டாடைகள் உடுத்தி, அலங்கார மாலைகள் மலர்கள்சூடி ஆயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ அழகுற எழுந்தருளிய காட்சி அற்புதமானது.
தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் வரை யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆலயத்தை நோக்கி நூற்றுக்கணக்கான பறவைக் காவடிகளும், தூக்குக் காவடிகளும் வந்த
 வண்ணமிருந்தன.
இதேவேளை, அந்தணர்களின் வேத மந்திர உச்சாடனம், விசேட தீபாராதனை வழிபாடுகளுடன் கொடியிறக்க வைபவம் இன்று மாலை 05.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
மயில் வாகனத்தில்முருகப் பெருமானும், அன்னப் பட்சி வாகனத்தில் முருகப் பெருமானின் இச்சா சக்தி மற்றும் கிரியா சக்திக்கான வள்ளி, தெய்வயானை தேவியரும், இடப வாகனத்தில் சண்டேஸ்வரப் பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முத்தெய்வங்களும் வெண்பட்டாடைகள் மற்றும் வெண்மாலைகள் சூடிவலம் வந்து அருள் பாலித்தமையும் இங்கு
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.