வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 08.09.2018. (புதன்கிழமை) இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப்பெருமானின் தங்கரத உற்சவம் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்
. இன்றைய தினம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வேல் விமானத்தில் வீதியுலா வீதியுலா வந்தார்மாலை 5 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, வேல்பெருமான் வள்ளி – தெய்வானை சமேதரராய் உள்வீதியுலா வந்து மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு
அருட்காட்சி அளித்தார்.
எம்பெருமான் தங்கரதமேறி ஜொலித்த அருட்காட்சியை காண பக்தர்கள் அலையென திரண்டு வந்திருந்தனர். கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள்
இடம்பெற்று வருகின்றன.
தினமும் காலையும் மாலையும் இடம்பெறும் திருவிழா நிகழ்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பல லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>









































