முருகன் அடியார்களே , கந்த சஷ்டி .02.10.2019..சனிக்கிழமை அன்று தான்
முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் எண்ணப்படுவது
ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டியின் போது, வெகு விமரிசையாக முருகன்ஆலயங்களில் நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறார். விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி.
கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார். ஆனால், வீரபாகுவும், முருகனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக்
கொள்கின்றனர்!
தாரகன் முருகனோடு நேரடியாக மோதவில்லை! எனினும் அன்பர்கள் மாட்டிக் கொண்டதால், முருகன் கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிகிறான். அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.
சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். எதிரிப் படை ப்லம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது. முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை
அனுப்பி வைக்கிறான்.
மன்னி ஆற்றங்கரையில், சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான்.
ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி, பாசுபதம் என்னும்
அஸ்திரம் அளிக்கின்றார்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen