நாகபூஷணி அம்மனின் கொடியேற்றத் திருவிழா 20-06-20

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.கருவறையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ நயினை நாகபூசனி அம்மனுக்கும், வசந்தமண்டவத்தில் 
அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள் மற்றும் ஆராதனைகள் என்பன இடம்பெற்றது.  
தொடர்ந்து உள்வீதி வலம் கொடிமரத்தினை வந்தடைந்து 12 மணியளவில் சுபநேரத்தில் கொடிமரத்தில் பிரதம சிவாச்சாரரியர் தலைமையிலான சிவாச்சரியார்கள் மஹோற்சவ கொடியினை 
எற்றிவைத்தனர்.
  இன்று ஆரம்பிக்கப்பட்ட மஹோற்வசம் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி ரதோற்சவமும், மறுநாள் தீர்த்தஉற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.இன்றைய கிரிகைகளை ஆலய பிரதம குரு வாமதேவக் குருக்கள் கைலாஸநாதக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இம் மஹோச்சத்தினை நடாத்தி வைத்தனர்.  
தற்போது நாட்டில் எற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் ஆலயத்தில் கலந்துகொள்ளாத நிலையில், ஆலய நிர்வாக சபை மற்றும் பிரதம குருக்கள் தலைமையிலான 
குருக்கள் ஆகியோர்கள் பங்குபற்றலுடன் மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.ஆலய நிர்வாகத்துடன் ஒத்துழைப்புக்காக 
கொடியேற்ற ம
ஹோற்சவத்தில் ஆலயத்திக்கு உள்ளே கலந்துகொண்ட சும்மா 100 பக்தர்களை நயினாதீவு பொஸிஸ் ஒத்துழைப்புடன் வெளியேற்றப்பட்டு மஹோற்சவம் இடம்பெற்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.