ஆன்மீக ரீதியாக நாம் வசிக்கும் வீட்டில் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இருக்கிறது, அதே போல் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறியலாம்.உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
இவை தான்:
வீடானது இருள் சூழ்ந்ததை போல் காட்சி அளிக்கும். உங்கள் மனதில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டுமா என்னும் எண்ண ஓட்டம் ஏற்படும்.பூஜை பாத்திரங்களை எவ்வளவுதான் சுத்தமாக கழுவினாலும் இரண்டு நாட்களில் மங்கலாகத் தோற்றமளிக்கும் .தினமும் உணவு
பொருட்கள் அதிகமாக வீணாகும் தன்மை ஏற்பட்டால் தெய்வீகத்தன்மை இல்லை என்பதை உணரலாம்.தண்ணீர் குழாய், மின்சார பொருட்கள் அடிக்கடி பழுதடையும்.
தெய்வம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:விபூதி,எலுமிச்சை,வேப்பிலை ,பூக்கள் போன்ற நல்ல நறுமணங்கள் வீட்டில் வரும்.பூஜைக்கு பயன்படுத்திய எலுமிச்சைப்பழம் காய்ந்து போகலாம். ஆனால் அழுகக்கூடாது.சாமி படங்களுக்கு வைக்கும் மஞ்சள்,குங்குமம் ஒரு
வாரம் ஆனாலும் பொலிவாக இருக்கும்.நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்னும் எண்ண ஓட்டம் மனதில் தோன்றும்.இதேபோன்று
ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள
வேண்டிய தகவல்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.பெண்கள் கோலம் போடும்போது தெற்கு திசை பார்த்தபடி கோலம் போடக்கூடாது.திருமணம் ஆன பெண்கள் ஒரேயொரு விரலில் மட்டும்தான் மெட்டி அணியவேண்டும். இரண்டு,மூன்று விரல்களில் மெட்டி
அணியக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள் உக்ரமான தெய்வங்கள் உள்ள கோவில்களுக்கு செல்லக்கூடாது.பெண்கள் கிழக்கு திசை பார்த்தபடி குங்குமம் வைத்துக்கொள்ளவேண்டும்.அமாவாசை,தேவஷம் போன்ற நாட்களில் பெண்கள் வீட்டுவாசலில் கோலம் போடுவதை தவிர்க்கவேண்டும்.திருமணமான
பெண்கள் மஞ்சள் கயிற்றில் மட்டுமே மாங்கல்யத்தை கோர்த்து அணியவேண்டும்.கோவில்களில் கொடுக்கும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக்கொள்ளக்கூடாது.பெண்கள் முந்தானையை
தொங்கவிட்டு நடக்கக்கூடாது.தலைக்கு குளிக்கும்போது
பெண்கள் சிறிது மஞ்சளை முகத்தில் பூசி குளிக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பாவற்காயை சமைக்கக்கூடாது.அவ்வாறு செய்தால் பாவம் வந்து சேரும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen