உங்கள் வீட்டில் பணம் தினசரி தேவைக்கு அவசியமானதாக இருக்கிறது. ஒருவருக்கு 100 ரூபாய் தேவை என்றால் ஒரு சிலருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.
நம்முடைய வீட்டில் இருக்கும் பணம் பல வழிகளில் பெருக வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். பணமானது விரைய செலவாகாமல் சுப செலவாக மாற வேண்டும் என்றும் நாம் செலவு செய்யும் பணம்
பல வழிகளில் நமக்கு திரும்ப வர வேண்டும் என்றும் பலரும்
விரும்புகின்றனர்.
பணம் பெருக செய்ய வேண்டிய சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை செய்வதன் மூலம் பணம் பெருகும்.
மல்லிகைப்பூக்கள்
மல்லிகை சுக்கிரனின் அம்சம்.. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம்.. நம்முடைய வருமானத்தில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
இதன் மூலம் பண வருமானம் பல வகையிலும் பெருகும். நமக்கு வரும் வருமானத்தில் ஐந்து சதவிகிதத்தை தானம் தர்மம் செய்வதற்கு என போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுக்க கொடுக்க செல்வம் பெருகும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen