skip to main | skip to sidebar
  • முகப்பு
  • ஆன்மிகம்
  • வாழ்த்துக்கள்
  • புகைப்படங்கள்
  • காணொளிகள்
  • தொடர்புகளுக்கு
நவக்கிரி பிள்ளையார் இணையம்
  • முகப்பு
  • மருத்துவம்
  • வினோதங்கள்
  • வாழ்வியல்
  • செய்திகள்
  • Mobile
  • Windows Phone 7
  • Review
  • Galleries
  • Videos
  • ..

வேட்டுவன் கோவில்கழுகுமலை,,,


7 - 8ஆம் நூற்றாண்டு, வேட்டுவன் கோவில், - கழுகுமலை,தூத்துக்குடி மாவட்டம்,தமிழகம், இந்தியா.
இந்த கோவில் ஒரு பாறையில் செதுக்க பட்டது. இன்று இருக்கும் diamond cutting கருவிகள் வைத்து கூட செதுக்க முடியாத வடிவமைப்புகள் அப்போதே தமிழன் செதுக்கி விட்டான்.
இது இப்போது உலகில் இருக்கும் அணைத்து விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எப்படி செதுக்கினார்கள் தமிழர்கள் என்று வியந்து போய் உள்ளனர்.
1300 வருடமாக இருக்கும் நமது( தமிழனின்) கைவண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்???
Tags : தகவல்கள்

அவிசாவளையில் சீதை சிறையிருந்த மலைக் குகை


பெறுமதிமிக்கதும், போற்றத்தக்கதுமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அவிசாவளை நகரம் சீதாவக்க அல்லது சீதாவக்கபுரம் என அழைக்கப்படுகின்றது. ஏ4 வீதியில் கொழும்பிலிருந்து 54 கிலோ மீற்றர்

தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் எல்லைகளில் அமைந்துள்ளதுடன் மலைநாட்டிற்கான நுழைவாயிலாகவும் திகழ்கின்றது. இன்றும் அவிசாவளை நகரத்தின் நிர்வாகம் சீதாவக்கபுர எனும் பெயர் கொண்ட உள்ளூராட்சி சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.

சீதாவக்க மற்றும் சீதாவக்கபுரம் எனும் பெயர்கள் அதுவும் சீதையுடன் தொடர்புபட்ட பெயர்கள் இந்த நகரத்திற்கு வருவதற்கு காரணம் என்ன என ஆராய்த போது பல்வேறு விதமான ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இவை யாவும் இப்பகுதியில் வாழும் பிரதேச மக்களின்

நம்பிக்கைகளாகவும் உறுதிப் படுத்தப்படாதøவகளாகவுமே காணப்படுகின்றன.
நகரின் மத்தியில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கும் அவிசாவளை அரச தங்குவிடுதிக்கும் இடையில் சீதாöலன என்னும் வீதி ஏ4 வீதியில் இருந்து பிரிந்து செல்கின்றது. மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் இந்த

வீதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யும் போது வீடொன்றில் இந்த வீதி முடிவடைகின்றது. வாகனத்தை இங்கு நிறுத்திவிட்டு, வீட்டின் முற்றத்தையடுத்திருக்கும் படிகளினால் பள்ளத்தாக்ககொன்றினுள் இறங்கிச் சென்றால் சீதை ஒழித்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் குகையொன்று காணப்படும். குன்றின் அடிப்பகுதியை அடைய முடியும்.

சாதாரணமாக குகையொன்றை எடுத்துக்கொண்டால் குகையின் மேற்பகுதியின் கற்பாறையிலிருந்து நீர் ஊற்றாக ஓடிக்கொண்டோ அல்லது சொட்டுசொட்டாக ஒழுகிய வண்ணமே இருக்கும். இங்கிருந்து பார்க்கும் போது குகை பற்றைச் செடிகளினால் மறைபட்டிருந்தாலும் தண்ணீர் குகையின் உட்பகுதிக்குள் செல்லாதிருப்பதற்காக பாறையின் மேற்பகுதியில் நீர் குகைக்குள் வருவதை தடைசெய்யும் வகையில் பொழியப்பட்டிருக்கும் பண்டைக் கால வடிகாலமைப்பைக் காணலாம்.

இங்கிருந்து குகையின் உட்பகுதிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. எனவே எமக்கு வழிகாட்டியாக வந்த அவிசாவளை நகர இலக்கம் 432  கிராமசேவையாளர் கே. ஏ. டி. கிறிஷ்டி ஜெயந்த என்பவரின் முயற்சியினால் வேறொரு பாதையால் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குகையின் உட்பகுதியை சென்றடைய முடிந்தது.

இராவணன் சீதையைக் கவர்ந்து தனது விமானத்தில் கொண்டுவந்து வரக்காபொல என்னுமிடத்தில் தரையிறங்கி (இங்குதான் இராவணனின் விமான நிலையம் இருந்ததாக இப்பகுதி மக்கள் நம்புகின்றார்கள்.) வடகிழக்குப் பக்கத்திலுள்ள வலும்தின மலையைக் கடந்து வந்து இந்த குகையில் சீதையை ஒழித்து வைத்ததாக நம்பிக்கை பிரதேச மக்கள் மத்தியில் வலுவாகக் காணப்படுகின்றது.

குகையின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டுவிட்டது. கற்பாறைகள் கீழேயுள்ள பள்ளத்தாக்கில் புரட்டிவிடப்பட்டு, காடுமண்டி, விச ஜந்துக்கள் நிறைந்து காணப்பட்டன. குகையின் உள்ளளே சிறிய ஆலயம் ஒன்று இருந்ததற்கான சாத்தியம் காணப்பட்டது. ஏனெனில் பீடமொன்று காணப்பட்டது. இங்கு விக்கிரகங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் வழிபாடுகள் நடைபெற்று வந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன.

இக்குகையில் நீண்ட காலமாக ஒரு வயோதிபர் வாழ்ந்து வந்ததாகவும் இவரின் மரணத்தின் பின்னர் சகவிரோதிகளினால் இந்த இடம் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருவதாகவும் யாருக்கும் சொந்தமில்லாத இந்தக் காணியை மருத்துவர் ஒருவர் கைப்பற்றுவதற்கு முயற்சித்தபோது ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து இம் முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகவும் அரச அலுவலர் ஒருவர் தெரிதவித்தார். குகையின் எழுபத்தைந்து சதவீதமான பகுதிகள்

சிதைக்கப்பட்ட போதிலும் இந்தக் குன்றும் அதனுடன் காணப்படும் குகையும் புனரமைக்கப்பட்டு அதன் பழைமையும் பெருமையும் யாத்திரிகர்கள் மற்றும் உல்லாசப் பயணிகளின் பார்த்துச் செல்லக் கூடியவாறான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது இப்பிரதேச மக்களின் எதிபார்ப்பாகும்.
இராமர் பாதம்

அவிசாவளையிலிருந்து எட்டியாந்தோட்டை செல்லும் ஏ7 வீதியின் ஜி/7 பாலத்திற்கருகில் பிடதெனியா சந்தி வருகின்றது. இந்த சந்தியிலிருந்து திம்பிரிபொல என்ற கிராமத்திற்கு செல்லும் வீதியில் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம் வரையில் செல்லும் போது வீதி முடிவடைந்து சீதா கங்கை தென்படுகின்றது. ஆற்றைக் கடந்து செல்வதற்கு தொங்குபாலம் காணப்படகின்றது.

வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத ஒற்றையடிப்பாதை. மனித நடமாட்டமில்லாத ஈரலிப்பான காட்டுப்பகுதி; மனித இரத்தம் உறிஞ்சும் சிறிய அட்டைகள் இப்பகுதியில் நிறைந்திருந்தன. சில இடங்களில் ஒற்றையடிப்பாதையை அடையாளம் காணமுடியாதபடி செடிகொடிகள் நிறைந்திருந்தன. கீழ் சீதாகங்கை சலசலத்து அமைதியாகப் பாய்ந்து

கொண்டிருந்தது. சில இடங்களில் கங்கையின் கரைக்கட்டின் விளிம்பில் நடந்துசெல்ல வேண்டிய நிலையும் இருந்தது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான்.
இத்தனையையும் கடந்து சென்று பார்த்த போது,  சீத்தா கங்கையைத் துருத்திக் கொண்டு ஒரு பெரிய கற்பாறை இருந்தது. அதில் பாதம் ஒன்று காணப்பட்டது. இப்பாதம், சராசரியாக 48 அங்குல நீளமும், 22 அங்குல அகலமும்

கொண்டதாக காணப்பட்டது. பாதத்தில் நடு விரலுக்கு நேராக கற்பூரம் ஏற்றுவதற்கு வசதியாக குழி ஒன்றும் காணப்படுகின்றது. பாறையில் பதியப்பட்ட பாத வடிவத்தைச் சுற்றி அல்லது பாதத்தின் வடிவத்திற்கு ஏற்றவாறு உளியினால் செதுக்கியுள்ளமையையும் காணமுடிகின்றது. பாதத்தின் நடுவில் பௌத்த மத சின்னங்கள் பொழியப்பட்டடுள்ளன.

இப்பிரதேச மக்கள் இராமருடைய பாதம் என இதைக் குறிப்பிட்ட போதிலும் இராமர் எதற்காக இப்பகுதிக்கு வந்தார் போன்ற கேள்விகளுக்கான விடைகள் அவர்களுக்கு தெரியவில்லை. இருந்தபோதிலும் பண்டைக் காலத்தில் இந்த இடம் மகப்பேற்றிற்கு பிரபல்யமாக விளங்கியதாகவும் இதனாலேயே இந்தக் கிராமம் திம்பிரிபொல என பெயர் பெற்றதாகவும் நம்பப்படுகின்றது.

மாயாதுன்ன மன்னனின் மகன் முதலாம் விஜயசிங்கனின் மøனவிக்கு பிரசவம் பார்ப்பதற்கு இங்கு கொண்டுவரப்பட்டார் எனவும் ஆனால் அரசி, சிவனொளி பாதமலையிலுள்ள பாதத்தைப் பார்க்க விரும்பியதாகவும், பிரசவ காலத்திலிருக்கும் அரசியை சிவனொளிபாதமலைக்கு அழைத்துச் செல்வது

எவ்வாறு என ஆலோசித்த மன்னன் மேற்குறிப்பிட்ட குன்றில் பாதம் ஒன்றை வரையச் செய்ததாகவும் இதை அரசிக்கு காட்டியதாகவும் சிங்கள நூல்களில் தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

பண்டைய சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களுக்கும் அரசிற்கும் உண்டு. கலாசார திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய தொல்லியல் சின்னங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் இங்கு உல்லாசப் பயணிகள் விஜயம் செய்து, அருமையான சின்னமொன்றை காண்பதற்கான வசதி வாய்ப்புகள்

ஏற்படுத்தப்பட வேண்டும். வாகனம் பயணிக்க முடியாத பழுதடைந்த வீதியும், புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகளும் இங்கு காணப்படுவதினால் பயணிகள் எவரும் இப்பகுதிக்கு செல்ல விரும்பமாட்டார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்
 
Tags : தகவல்கள்

பிறந்த நாள் வாழ்த்து..திரு. அ.ராஜேஸ்வரன்

 

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட அம்பலவாணர் ராஜேஸ்வரன் (ராசன்)  அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாள்.(09.09.13. இன்று.இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றார்கள் .
அளவான பேச்சு பண்பான அணுகுமுறை உதவிடும் மனப்பாங்கு  சமுதாய அக்கறையும் கொண்ட இவ் நல்லுள்ளத்தவனை எம் ஊர் ஒன்றியமும் உறவு இணையங்களும் அன்புடன் வாழ்த்துகின்றோம்,,,,"
Tags : வாழ்த்துக்கள்

நல்லூர் கந்தன்தேரில்பவனியின்புகைப்படங்கள்பகுதி.02

 
   வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் ரதோற்சவம் இன்று காலை 7.00 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தேர் திருவிழாவில் இலங்கையில் நாலாபுறங்களிலும் இருந்து வந்துள்ள லட்சோபலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்தணர்களின் வேத முழக்க ஒலிகளும் பக்தர்களின் அரோஹரா சத்தங்களும் வானைப் பிளக்கின்றதாக உள்ளது
















 
Tags : ஆலய நிகழ்வுகள்

நல்லூர் கந்தன்தேரில்பவனி இலட்சக்கணக்கான மக்களிற்கு மத்தியில் ..

na7

இலட்சக்கணக்கான மக்களிற்கு மத்தியில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் ரதோற்சவம் இன்று காலை 7.00 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தேர் திருவிழாவில் இலங்கையில் நாலாபுறங்களிலும் இருந்து வந்துள்ள லட்சோபலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்தணர்களின் வேத முழக்க ஒலிகளும் பக்தர்களின் அரோஹரா சத்தங்களும் வானைப் பிளக்கின்றதாக உள்ளது. அத்துடன் இலங்கை விமானப்படையின் ஹெலிகப்டர் வழமைபோன்று மலர் சொரிந்து வட்டமிடுகின்ற காட்சி சிறப்பாக உள்ளது. ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமான் ஆரோகணித்திருக்கும் தேருக்குப் பின்னால் அங்கப் பிரதட்சணை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். இத் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. நேரடி விவரணங்களை வசந்தா வைத்தியநாதன், நடேச சர்மா ஆகியோர் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். புகைப்படங்கள் இனைப்பு

na0

    na1 na2 na3 na4 na5

 na6 na7


 na8

 na9

 

Tags : ஆலய நிகழ்வுகள்

மூல்கைம்முத்துக்குமாரசாமி கோவில்தேர்திருவிழா


dodmun

யேர்மனியில் மூல்கைம் நகரில் எழுந்தருளியுள்ள முத்துக்குமாரசாமியின் தேர்திருவிழா 01.09.13 வான இன்று 18 நாட்களில் 13 பாடல்களுக்கு இசையமைத்த இசைப்பேழையை ஈழத்துக்கலைஞர்கள் வெளியிட்டனர். மூல்கைம் முத்துமாரசாமி பக்திப்பாமாலை சுவாமி உள்வீதி உலா வந்த தேரடியில் மிகச்சிறப்பாக வெளியியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழா மணிக்குரல் தந்த முல்லைமோகன் தொகுப்பில் இடம் பெற்றது.ஆலயக்குருவின் உரையுடன் ஆரம்பித்து ஒலிப்பேழை வெளியிட்டு வைக்கப்பட்டது சிறப்பம்சம்,{காணொளி}


Tags : ஆலய நிகழ்வுகள்

உங்களுக்கு வேண்டும்வரம் அருள்பவர்,,

 
உங்களுக்கு வேண்டியதை நினைத்துகொண்டு உங்கள் நண்பர்களுக்கு இந்த பிள்ளையாரை பகிர்ந்து கொள்ளுங்கள் இரண்டு நாள்களுக்குள் நிங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும் நண்பர்களே...
Tags : ஆன்மிகமும் ஜோதிடமும்

விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா லாச்சப்பல்


பிரான்சின் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா இன்று.01.09.2013. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இருந்து சில காட்சிப் பதிவுகள்.{காணொளி.புகைப்படங்கள்,,}

 
 
rajah
Tags : ஆலய நிகழ்வுகள்

"ராம் & இந்து திருமண நல்வாழ்த்து"


திருமண நாள் இன்று 01,09 2013. எட்தாவதுவருட திருமண நாள் காணும் .♥ ராம் & இந்து ♥,தம்பதியினருக்கு நல் வாழ்த்துக்களைகூறும் அன்பு அம்மா அப்பா மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர்,பிள்ளைகள்.சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.இவர்களுடன் இணைந்து. http://lovithan.blogspot.ch . நவற்கிரி .கொம் நிலாவரை.,கொம் நவக்கிரி.கொம்.இந்த இணையங்களும் ,இறைஅருள் பெற்று சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டுகா லம் நீடுழி சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்த்துகின்றோம்

  
Tags : வாழ்த்துக்கள்
Neuere Posts Ältere Posts Startseite
Powered by Blogger.
Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

ஸ்ரீமாணிக்கபிள்ளையார்

விநாயகனே/Vinai Theerpavane

Blogger templates

நாங்களும் ஃபேஸ்புக்கில்

navarkiri.com

siruppiddy

navatkiri.news

siruppiddy

nilavarai

siruppiddy

counter

வந்தவர்கள்

Popular Posts

  • வாரம் ஒரு கீரை! மணத்தக்காளி!
  • திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா (தேவன் தர்மா)23.05.2024
  • பிறந்தநாள் வாழ்த்து திரு.துரைராஜா தியாகராஜா 01.04.2024
  • பிறந்தநாள் வாழ்த்து திருமதி தியாகராஜா.தர்மா 28.02.2024
  • திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி தியாகராஜா (தேவன் தர்மா)23.05.2026

கிராமங்கள்

நவற்கிரி நிலாவரை

மழலைக்கல்வி

siruppiddy

Blog Archive

Pages

  • Startseite

Labels

_- (1) _விஞ்ஞானம் (3) _விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (3) ஆலய நிகழ்வுகள் (614) ஆன்மிகமும் ஜோதிடமும் (101) ஆன்மிகம் (358) இணைய செய்திகள் (133) இந்து ஆலயங்கள் (20) இந்து முறைகள் (5) உடல் நலம் (24) காணொளி (126) கோவில்கள் (18) சம்பவம் (9) சாஸ்திரம் (4) சுகாதார செய்திகள் (89) செய்திகள் (305) தகவல்கள் (88) தகவல்கள் புகைப்படங்கள் (55) தொடர்புகளுக்கு (1) தொழில் நுட்பம் (5) தொழில்நுட்பம் (2) பக்திபாடல்கள் (8) பாரம்பரியம் (7) புகைப்படங்கள் (59) புராணம் (2) மருத்துவ செய்திகள் (2) மருத்துவம் (9) வரலாறுகள் (20) வர்த்தகம் (1) வாழ்த்துக்கள (69) வாழ்த்துக்கள் (1295) வாழ்வியல் (6) விஞ்ஞானம் (6) விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (1) விந்தைஉலகம் (1) வினோதங்கள் (10)

Ads 468x60px

.

Social Icons

.

Blog Archive

  • Mai (25)
  • Juni (121)
  • Juli (312)
  • August (248)
  • September (95)
  • Oktober (103)
  • November (25)
  • Dezember (26)
  • Januar (11)
  • März (20)
  • April (4)
  • Mai (7)
  • Juni (12)
  • Juli (14)
  • August (11)
  • September (18)
  • Oktober (8)
  • November (21)
  • Dezember (11)
  • Januar (13)
  • Februar (4)
  • März (9)
  • April (10)
  • Mai (9)
  • Juni (10)
  • Juli (6)
  • August (17)
  • September (13)
  • Oktober (11)
  • November (5)
  • Dezember (9)
  • Januar (17)
  • Februar (8)
  • März (30)
  • April (10)
  • Mai (17)
  • Juni (18)
  • Juli (11)
  • August (23)
  • September (25)
  • Oktober (23)
  • November (20)
  • Dezember (17)
  • Januar (14)
  • Februar (13)
  • März (32)
  • April (40)
  • Mai (26)
  • Juni (39)
  • Juli (22)
  • August (23)
  • September (28)
  • Oktober (22)
  • November (22)
  • Dezember (15)
  • Januar (23)
  • Februar (22)
  • März (41)
  • April (20)
  • Mai (22)
  • Juni (38)
  • Juli (34)
  • August (46)
  • September (20)
  • Oktober (20)
  • November (24)
  • Dezember (24)
  • Januar (22)
  • Februar (18)
  • März (59)
  • April (25)
  • Mai (16)
  • Juni (23)
  • Juli (21)
  • August (25)
  • September (17)
  • Oktober (19)
  • November (23)
  • Dezember (10)
  • Januar (22)
  • Februar (14)
  • März (27)
  • April (28)
  • Mai (12)
  • Juni (13)
  • Juli (13)
  • August (15)
  • September (9)
  • Oktober (19)
  • November (21)
  • Dezember (22)
  • Januar (20)
  • Februar (21)
  • März (25)
  • April (21)
  • Mai (13)
  • Juni (20)
  • Juli (22)
  • August (20)
  • September (11)
  • Oktober (17)
  • November (18)
  • Dezember (17)
  • Januar (25)
  • Februar (16)
  • März (48)
  • April (22)
  • Mai (12)
  • Juni (12)
  • Juli (19)
  • August (12)
  • September (17)
  • Oktober (29)
  • November (23)
  • Dezember (25)
  • Januar (14)
  • Februar (12)
  • März (13)
  • April (10)
  • Mai (7)
  • Juni (10)
  • Juli (5)
  • August (12)
  • September (14)
  • Oktober (12)
  • November (13)
  • Dezember (16)
  • Januar (13)
  • Februar (7)
  • März (13)
  • April (8)
  • Mai (11)
  • Juni (12)
  • Juli (8)
  • August (12)
  • September (13)
  • Oktober (9)
  • November (10)
  • Dezember (14)
  • Januar (7)
  • Februar (6)
  • März (10)
  • April (11)
  • Mai (9)
  • Juni (5)
  • Juli (7)
  • August (16)
  • September (14)
  • Oktober (11)
  • November (12)
  • Dezember (2)
  • Januar (13)
  • Februar (9)
  • März (6)
  • April (9)
  • Mai (8)
  • Juni (3)
  • Juli (5)
  • August (7)

Featured Posts

.
 
Copyright © 2011 நவக்கிரி பிள்ளையார் இணையம் All Rights Reserved.
Designed by GamblingNerd.com Thanks to Concert Tickets | Concert News | Live Bingo Sites