பிறந்தநாள் வாழ்த்து செல்வன் மோகனதாஸன் சாருசன்16-12-20

யாழ்  அச்சுவேலியை பிறப்பிடமாகவும்,சுவிஸ் பெர்ன் குட்வீலை வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி மோகனதாஸன் ஜெயந்த்தி  தம்பதியினரின் செல்வப்புதல் சாருசனின் பிறந்தநாள்.16-12-2020  இன்று இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரர்கள்  அன்பு  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் இவரை .மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் தோப்பு போதிப்பிள்ளையார்  சன்னதி முருகன் இறை ஆசியுடன்
 சகல கலைகளும் கற்று நோய் நொடி இன்றி  துன்பங்கள் எல்லாம்
 பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து
 நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்து. திரு.வீரகத்தி கனகரத்தினம்-11.12.20

 

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் (ரத்தினம்)அவர்களின் 67வது பிறந்த நாள் 
.11.12.2020 .இன்று 
 இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார் மகன்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து புத்துர் சிவன்  
சுவிஸ் சூரிச் முருகன் 
இறை ஆசியுடன்    எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இப்படி மரகதலிங்கத்தை வழிபட்டால் அனைத்து தோஷங்களில் விடுதலை

 

மரகதலிங்கம் ஒரு வகை சிவலிங்கம். மரகத்தால் செய்யப்பட்டிருக்கும்.  பல கோயில்களில் மரகத லிங்கங்கள் உள்ளன. மரகதக்கல் ஒன்பது நவரத்தினங்களுள் ஒன்றாகும். நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. சில குறிப்பிட்ட நவரத்தினங்களுக்கு 
ஈர்ப்பு சக்தி உண்டு.
புதனுக்கு உரிய மரகதத்தை,லிங்க வடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை
 வடிவமைத்தனர்.
கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.
மன்னர்கள் இந்த வகை லிங்கங்கள் கோவிலில் வைத்து வழிபடுவதையே சிறப்பு என்று கருதினார்கள். மரகத லிங்கத்தை
 வணங்குவதன் மூலம் சகல விதமான
 தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.கல்வி,
ஆரோக்கியம்,அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகதலிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது என்கிறார்கள். வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகதலிங்கத்தை 
வணங்கலாம்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சிவபாதம் ரதி 10-12-20

யாழ்பணத்தை பிறப்பிடமகவும் . நவற்கிரி புத்தூரை வாழ்விடமாகவும் தற்போது  யாழில் வசித்துவரும் திரு திருமதி சிவபாதசுந்தரமூர்த்தி
ரதி ( ரதி) அவர்களின் பிறந்த நாள் 10-12-2020..இன்று  
இவரை அன்புக்கணவர்   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் 
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நல்லூர் கந்தன்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன்
இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடியின்றி இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் பல்லாண்டு பல்லாண்டு காலம் 
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திருமதி திரு ராஜா 09.12.20

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். தற்போது கனடாவில்  வசிக்கும்   திருமதி  திரு ராஜா (திருலோலம் )அவர்களின்  பிறந்த நாள் வாழ்த்து ,09.12.2020, இன்று
இவரை   அன்புப்  ,பிள்ளைகள்,.அன்புச்சகோதரர்கள்   மாமா  ,மாமி
 குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் 
,உறவினர்கள் நண்பர்களும்
, இவர்ரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார். கனடா முருகன்  இறை அருள் பெற்று உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி.
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சிவபாலன் தம்பதியினரின் செல்வி சுதர்மா 07.12.20

 யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசிக்கும்  திரு திருமதி   சிவபாலன் &தேவா
தம்பதியினரின் செல்வப்புதல்வி  (சுவிசை பிறப்பிடமாகக்கொண்ட) சுதர்மா  (Sutharma Sivabalan)
இன்று தனது 20 வது அகவையில் கால்பதிக்கிறார்.07.12.2020 .இன்று  
இவரை அன்பு அப்பா அம்மா அன்புச்சகோதரி அன்புச்சகோதரன்  பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்வாழ்த்துகின்றனர்  இவர்களுடன்
இணைந்து    இவரை அளவெட்டிப்பிள்ளையார்   யாழ் நல்லூர் கந்தன்.மற்றும் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுக்கையம்மன் சுவிஸ் சூரிச் முருகன்  
   இறை அருள் பெற்று பல்கலைகளும்  கற்று  அன்பிலும் அறத்திலும்
நிறைந்து  அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
 தன் பிறந்தநாட்பரிசாக ''தர்மகாரியங்களுக்காக செலவிடுங்கள்'' என என்னிடம் வழங்கிய நிதியில் இன்று இரண்டு பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்பாக துவிச்சக்கர வண்டிகள் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.
கடந்த ஆண்டிலும் தன் பிறந்தநாட்பரிசாக எனக்கு அறிமுகமான ஓருவரின் மருத்துவ சத்திரசிகிச்சைக்காக ரூபா 200000.00 வழங்கியிருந்தார். முன்னைய ஆண்டிலும் அவரது பிறந்த நாளில் 03 பாடசாலைப் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு பரிசாக துவிச்சக்கர வண்டிகள் 
வழங்கியிருந்தேன்.
இளைய வயதில் அவரின் முதிர்ந்த நல்லெண்ணத்திற்கும், தர்ம சிந்தனைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நித்திய, நீடித்த, பரிபூரண தெய்வ ஆசீர்வாதம் அந்தக் குழந்தைக்கு கிடைக்கட்டும்.


நிலாவரை.கொம் செய்திகள் >>> /> 

 


 

பலருக்கு தெரிந்திடாத அறிவியல் உண்மைகள் கண்திருஷ்டியும் மூடநம்பிக்கையும்

‘‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்லடி படுவதால் உண்டாகும் காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். அதே நேரத்தில் கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி
 சுற்றிப்போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.’இவன் இத்தனை சுகமாய் வாழ்கிறானே, 
என்று அருகில் உள்ளோரின் உள்ளத்தில் தோன்றும் பொறாமை உணர்வினையே திருஷ்டி என்று அழைக்கிறோம். இந்த பொறாமை என்பது பொதுவாக 
மனிதனின் இயற்கை குணங்களில் ஒன்று.
சாதாரண மனிதர்கள் ஆகிய நம் எல்லோருக்குள்ளும் இந்த மாதிரியான எண்ணம் தோன்றுவது இயற்கை. பெண்களுக்கு இடையே அழகு, செல்வம் ஆகியவற்றிலும், ஆண்களுக்கு பதவி, பட்டம், புகழ், வசதிவாய்ப்பு ஆகியவற்றிலும், மாணவர்களுக்கு
 இடையே பரிசுகள் பெறுவதிலும் இம்மாதிரியான குணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.இந்த திருஷ்டி தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பூசணிக்காய் சுற்றி உடைத்தல் எலுமிச்சம்பழம் நறுக்கி பிழிதல், சிதறு தேங்காய் உடைத்தல், ஆரத்திச்சுற்றுதல், உப்புச்சுற்றி 
போடுதல், மிளகாய் சுற்றி போடுதல் என்று பல்வேறு 
சம்பிரதாயங்களைக் கடைபிடிக்கிறார்கள். இதனை மூட நம்பிக்கை என்று சொல்லி முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. பிரதி சனிக்கிழமை தோறும் ஸ்ரீசுதர்ஸனரை (சக்கரத்தாழ்வார்) வழிபட்டு
 வருவதால் திருஷ்டி தோஷத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இயலும்.
சிலர் அமாவாசைக்கு மட்டும் காக்கைக்கு உணவு படைக்கிறார்கள். தினந்தோறும் நாம் உணவருந்துவதற்கு முன்னால் காகத்திற்குச் சாதம் வைப்பது நல்லது. ஸ்நானம் செய்யாமல் சமைத்த 
சாதத்தை காகத்திற்கு வைக்கக்கூடாது. தினசரி காகத்திற்குச் சாதம் வைக்க இயலாதவர்கள் அமாவாசை மற்றும் விரத 
நாட்களிலாவது அவசியம் காகத்திற்குச் சாதம் வைக்க வேண்டும் என்பதை பெரியோர்கள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக அமாவாசை நாளில் மட்டும்தான் காகத்திற்குச் சாதம் வைக்கவேண்டும் என்பதில்லை. தினசரி காகத்திற்குச் சாதம் வைத்தபின் நாம் சாப்பிடுவது நமது பரம்பரைக்கே நன்மை தரக்கூடியது.
நம்மில் பலருக்கு கருடபுராணம் என்ற ஒன்று இருப்பதே திரைப்படத்தின் வாயிலாகத்தான் தெரிய வந்துள்ளது. இன்னமும் சில வீடுகளில் மகாபாரதம் படித்தால் குடும்பத்தில் சண்டை வரும்இ ராமாயணம் படித்தால் கணவன் மனைவி பிரிவு உண்டாகும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையே
 நம் வீட்டுப்பிள்ளைகள் தொலைக்காட்சித் தொடர்களின் மூலம்தான் அறிந்து கொள்கிறார்கள்.இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களை சுத்தமாகத் தெரியவில்லை. இந்தியாவின் பிரதானமான இதிகாசங்களுக்கே
 இந்த நிலைமை எனும் போது மற்ற புராணங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அதிலும் கருடபுராணம் என்பது நரகத்தினைப் பற்றியும் அதில் தரப்படும் தண்டனைகளைப் பற்றியும் சொல்லப்படுவது 
என்ற கருத்து அடி மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கும் போது
 அதனை வீட்டில் வைத்துப் படித்தால் துர்மரணங்கள் வீட்டில் நிகழும் என்ற மூடநம்பிக்கையை நம்மவர்கள் பரப்பி வைத்துள்ளார்கள். கருடபுராணம் மட்டுமல்ல, 18 புராணங்களையும் வீட்டில் வைத்துப் படிக்கலாம். அதில் எந்த விதமான தவறும் இல்லை.
ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கவேண்டும் அவ்வாறு புரியாத பட்சத்தில் நாமாக கற்பனை செய்து
 புரிந்துகொள்ளாமல் தகுதி வாய்ந்த குருவின் உதவியோடு அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். கருடபுராணத்தை வீட்டில் வைத்து படிக்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் போது நம் இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள் ஆடியில் அம்மன், புரட்டாசியில் பெருமாள் என்று மாதத்திற்கு ஒரு வடிவத்தை 
வணங்குகிறோம். சரியான பாதையில்தான் செல்கிறோமா? சந்தேகமே வேண்டாம். சரியான பாதையில் தான் செல்கிறோம். இனிப்பு என்பது ஒன்றுதான். ஆனால் அதை லட்டு, ஜாங்கிரி, 
மைசூர்பாகு என்று பல வடிவங்களில் ருசிக்கிறோம். ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டாலும் இறுதியில் நாம் அனுபவித்து உணரும் ருசி என்னவோ இனிப்பு 
ஒன்றுதான். அவரவருக்கு பிடித்த இனிப்பு வகைகளை ருசிப்பது போல, ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த வடிவத்தில் இறைவனை தரிசிக்கின்றனர். இந்து மதத்தைப் பொறுத்தவரை இறைவனை 
நம்மிடமிருந்து தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என நம் குடும்பத்தில் உள்ள உறவு முறைகளை இறைசக்திக்கும் அளித்து வழிபடுகிறோம்.
வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை இந்து மத கடவுளுக்கு உண்டு. ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை இந்து மதத்தில் மட்டும்தான். தாயாக அம்மன், தந்தையாக சிவன், நண்பனாக கிருஷ்ணன், குருவாக தட்சிணாமூர்த்தி, ஆசிரியையாக சரஸ்வதி, செல்வமகளாக லட்சுமி, செல்வ மகனாக குபேரன், மழையாக
 வருணன், நெருப்பாக அக்னி, அறிவாக சுவாமிநாதன், ஒரு வழிகாட்டியாக பார்த்தசாரதி, உயிர்மூச்சாக வாயு, காதலாக மன்மதன், மருத்துவனாக தந்வந்திரி, வீரத்திற்கு மலைமகள், ஆயகலைக்கு மயன், கோபத்திற்கு பரசுராமன், ஊர்க்காவலுக்கு ஐயனார், வீட்டு
 காவலுக்கு பைரவர், குடிக்கின்ற பாலிற்கு காமதேனு, கற்புக்கு சீதை, நன்னடத்தைக்கு ராமன், பக்திக்கு 
அனுமன், குறைகளைக் கொட்ட வெங்கடாசலபதி, சகோதரனுக்கு லட்சுமணன், வீட்டிற்கு வாஸ்துபுருஷன், மொழிக்கு முருகன், கூப்பிட்ட குரலுக்கு ஆதிமூலமான நாராயணன், போர்ப்படைக்கு வீரபாகு, கலைக்கு நடராஜன், உணவிற்கு அன்னபூரணி, மரணத்திற்கு யமன், பாவக்கணக்கிற்கு சித்ரகுப்தன், பிறப்பிற்கு பிரம்மன், சுகப்பிரசவத்திற்கு 
கர்ப்பரட்சாம்பிகை,இவ்வாறு நமது வாழ்க்கை முறையோடு இறைவனையும் நாம் சேர்த்துக் காண்பதால் உருவானதே இத்தனை வடிவங்கள். ஆக இவை அனைத்தும் நமது பக்தி மற்றும் சிரத்தையின் வெளிப்பாடே அன்றி மூட நம்பிக்கைகள் அல்ல. நமது வாழ்க்கை முறையே 
இறை வழிபாட்டோடு ஒன்றிணைந்தது தான். நமக்கு முற்றிலும் மன நிறைவைத் தருவதால் வெவ்வேறு விதமான உருவங்களில் இறைவனை வழிபடுவதில் எவ்விதத் தவறும் இல்லை.
தாய் தந்தை இருந்தால் அமாவாசை அன்று தலைக்கு குளிக்கக் கூடாது என்கிறார்களே இது ஏன்?இது தவறான
 கருத்து. முதலில் நமது சாஸ்திரம் சொல்வதைப் பற்றி அறிந்துகொள்வோம். பொதுவாக உச்சி முதல் உள்ளங்கால் வரை நனைய 
குளிப்பதற்குத்தான் ஸ்நானம் என்று பெயர். இதனை எல்லோரும் தினமும் செய்ய வேண்டும். இதனை நித்ய ஸ்நானம் என்ற 
பெயரில் அழைப்பார்கள். இந்த நித்ய ஸ்நானம் செய்வதற்கு பெற்றோர் உள்ளவர்கள் பெற்றோர் இல்லாதவர்கள் என்ற பேதம் ஏதும் இல்லை. இதில் அமாவாசை 
நாளும் அடக்கம். அதே நேரத்தில் அமாவாசை நாளில் தந்தையை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. இந்த தர்ப்பணத்தை அபரான்ன காலம் என்று அழைக்கப்படுகின்ற மதிய நேரத்தில் செய்ய வேண்டும். அதாவது மதியம் 11 மணி 
முதல் 02 மணிக்குள்ளாக செய்ய வேண்டும். அவ்வாறு தர்ப்பணம் செய்பவர்கள் நித்ய ஸ்நானத்தை காலை எழுந்தவுடனும் அதனைத் தொடர்ந்து அபரான்ன காலத்தில் தர்ப்பணம் செய்வதற்கு 
முன்னால் இரண்டாவது முறை ஒரு ஸ்நானமும் செய்ய வேண்டும்.தர்ப்பணம் செய்வதற்காக இவ்வாறு இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்வதைத்தான் தகப்பன் உள்ளவர்கள் செய்யக்கூடாது என்று
 சொன்னார்கள். அதைத்தான் நாம் இவ்வாறு தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். நித்ய ஸ்நானம் என்பது 
தலைக்கு குளிப்பதே ஆகும். அமாவாசை நாள் உட்பட எல்லா நாளிலும் எல்லோருக்கும் நித்ய ஸ்நானம் என்பது உண்டு என்பதே நமது சாஸ்திரம் 
சொல்லும் உண்மை.

நிலாவரை.கொம் செய்திகள் >>>









செல்வம் செழிக்க உங்கள் வீட்டில்இப்படி விளக்கை ஏற்றி வந்தால் போதுமாம்

உங்கள் வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமானால் குபேரனின் அருள் கிடைக்க வேண்டும். இதற்கு நீங்கள் குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏனென்றால் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார்.வற்றாத செல்வத்தை நமக்கு கொடுக்கக் கூடியவர். யாருக்கெல்லாம் பணம் வேண்டும் என்றும் பணம் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ 
அவர்கள் குபேர பூஜை செய்வது நல்லதாகும். மேலும் குபேர தீபம் ஏற்றி அவரை வணங்க வேண்டும்.
எப்படி குபேரரை வழிபட வேண்டும் என்று பார்ப்போம்-குபேரரை வழிபடுமுன் குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று
 வீட்டை சுத்தம் செய்யணும்.,அன்று சாயங்கால வேளையில் வீட்டு வாசலில் பச்சரிசி மாவால் கோலமிட்டு அந்த கோலத்திற்கு செம்மண் பட்டை இட்டு அலங்கரிக்கணும்.அதன் பிறகு
 நிலைப்படிக்கு 
சந்தனம் தெளித்து, மஞ்சள், குங்குமம் இடணும்.,பின்பு கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியில் மஞ்சள் வைத்து மற்றொரு பகுதியில் குங்குமம் வைத்து நிலைப்படிக்கு
 ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை 
பழத்தையும்,மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் நிலைப்படியின் இருபுறமும் வைக்க வேண்டும்.அதன்பின் நிலைப்படியின் இரண்டு புறத்திலும் பூ வைக்க

 வேண்டும். வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி 
செய்ய வேண்டும்.
முதலாவது விளக்கில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதன் பிறகு நல்லெண்ணெய் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி குபேரர் விளக்கு ஏற்ற வேண்டும். இதில் பழைய திரியோ அல்லது முதல் நாள் ஏற்றி மீதம் வந்த எண்ணெயையோ உபயோகிக்கக்கூடாது.
மேலும் தினமும் புதியதாக எலுமிச்சை பழத்தையும் வைக்க வேண்டும். இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.இந்த குபேர கடவுளுக்கு தீபம் ஏற்ற 
சரியான நேரம் குபேரருக்கு உகந்த நாளான
 வியாழக்கிழமை அன்று மாலை 05 மணி முதல் இரவு 08 மணி. இந்த சமயத்தில் குபேர விளக்கில் தீபம் ஏற்றி பூஜை 
செய்யணும்.இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள், துன்பங்கள், கடன் பிரச்சனைகள் அனைத்தும் பனி போல் விலகி நீங்கள் கோடீஸ்வரகலாமாம் .
நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா ஜெயலட்சுமி .0212.20

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமி
{ஜெலா }அவர்களின் பிறந்த நாள் . 02.12.2020.இன்று இவரை 
அன்புப் பிள்ளைகள்
மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
நோய்நொடிஇன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும்
 வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.