பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் ஐஸ்வினி 12.09.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஐஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது ஒன்பதாவது 
அகவை நாளை 12.09.2022. இன்று  தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார் 
மாமாமார் மாமி மார்
மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும். நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்  நவற்கிரி அப்பா வயிரவர் மற்றும் சகலதெய்வங்களின்   இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று வழ 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்.
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் ----
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்   
அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம்  ......   ..
   வாழிய நீ பல்லாண்டு 
பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு 
அந்த எல்லாம் வல்ல இறையருளோடு
என உளமார ..... வாழ்த்துகின்றோம்  ...... 
இங்ஙனம் உன் அன்பு ..ஐயா அப்பாம்மா
 ...வாழ்க நலமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா 24.09.22 ஆரம்பமாகவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.
செப்டம்பர் 24-09-2022.ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் மகோத்சவம், மகோத்ஸவத்திற்கு முந்தைய முன் ஏற்பாடு கூட்டத்தில் முடிவு 
செய்யப்பட்டுள்ளது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் அல்வாப்பிள்ளை சிறி தலைமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி நடைபெற்ற மகோத்ஸவ கால முன் ஏற்பாடு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டத்தின் முடிவில் ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஊடக அறிக்கையில், “சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது
 அவசியம் என்று கருதப்படுகிறது மற்றும் பக்தர்கள் ஆசாரம் முத்திரையாக கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக் 
கொள்ளப்படுகிறார்கள்.
கோவில் வளாகத்தில் உணவு கையாளும் நிலையங்களை அமைப்பவர்கள், நாட்டின் எந்தப் பகுதியிலும் பதிவு செய்யப்பட்ட கேன்டீன் நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.
பதிவுசெய்யப்பட்ட கேன்டீன் அமைந்துள்ள பகுதிக்கான சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழை அனைத்து உணவு கையாளுபவர்களும் தங்களுடன் எடுத்துச் 
செல்ல வேண்டும்.
பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் கிணறுகளில் இருந்து பெறப்படும் குடிநீரை மட்டுமே பயன்படுத்த 
வேண்டும்.
கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள இனிப்பு கடைகள் மற்றும் கச்சான் விற்பனையாளர்கள் இந்த இடங்களில் உற்பத்தி செய்ய முடியாது. விற்பது (கச்சான் வறுத்தல் மற்றும் இனிப்புகள் செய்வது) மட்டுமே செய்ய முடியும், அன்னதான கணிதத்தில் பணிபுரிபவர்கள் மருத்துவ சான்றிதழ்
 பெற்றிருக்க வேண்டும்.
கடை உரிமையாளர்கள் அனைவரும் தினமும் வரும் கழிவுகளை வெளியில் வீசாமல் சேகரித்து பிரதேச சபை வாகனம் மூலம் 
அப்புறப்படுத்த வேண்டும்.
கோயில் வளாகத்தில் பச்சை குத்துதல், காது குத்துதல் போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை, போதைப்பொருள், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் விற்பனை செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 1-ஆம் தேதி குருக்காட்டு விநாயகர் தரிசனம், 2-ஆம் தேதி வெண்ணெய் உற்சவம், 3-ஆம் தேதி துகில் உற்சவம், 4-ஆம் தேதி சர்ப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
மேலும் அக்டோபர் 5-ஆம் தேதி கம்சன் துறைமுகத் திருவிழாவும், 6-ஆம் தேதி வேட்டைத் திருவிழாவும், 7-ஆம் தேதி சப்பரத் திருவிழாவும், 8-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், 8-ஆம் தேதி சமுத்திரத் தேர்த் திருவிழாவும் ந
டைபெறவுள்ளது.
ஒக்டோபர் 8ஆம் திகதி காலை கேணித் தீர்த்த உற்சவமும், மாலையில் கொடியேற்றமும் நடைபெறுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> >



யாழ் தொண்டைமனாறுசெல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா09.09.22

ஈழத்தின் பிரசித்தி பெற்ற தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி
 பூர்வமாக இடம் பெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், அடியழித்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பல்வேறு காவடிகளும் கந்தனை நோக்கி வந்த 
வண்ணமிருந்தன.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த மாதம் 27ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் 
ஆரம்பமானது.
நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் நாளை மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11ம் திகதி பூக்காரர் பூசையும் இடம்பெறவுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் ((ராஜன்) 09,09,22

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.,09,2022. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
 பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி   ஸ்ரீ ஞானவைரவர் இறை அருள்பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
 துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
 நோய் நொடி இன்றி  பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி 
வாழ்கவாழ்க வென நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,வாழ்த்துகின்றன 
வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



நாம் விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது என்ன என்ன

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது
2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது
3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது
4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும்
 பூச கூடாது
5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்
6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது
7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது .திரும்பி எதிர் திசையில் 
பார்த்து பூசவேண்டும்
8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும்
9. வலது கை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது
10.விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து எடுக்க கூடாது
11.விலைக்கு வாங்கிய விபூதியை பூச கூடாது
12.விபூதியை கீழே சிந்தக்கூடாது
13.கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் 
நின்று வாங்ககூடாது
14.திண்ணை ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து வாங்ககூடாத
15.ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது
16.ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போட்டுவிட்டு வருவது ஆலயம் செல்லாததை விட 
கொடிய பாவசெயல்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேர்த் திருவிழா .07.09.22

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(07.9.2022) வெகுசிறப்பாக 
இடம்பெற்றது.
இன்று அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கொடித்தம்பப் பூசை இடம்பெற்றது. இன்று காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை 
ஆரம்பமானது.
வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் பட்டாடைகள் ஜொலி ஜொலிக்க, சர்வமங்கள ஆபரணங்கள் மினு மினுங்க அலங்கார நாயகியாக அழகிய பீடத்தில் உள்வீதியில் மெல்ல மெல்லத் திருநடனத்துடன் அசைந்தாடி வந்து காலை-9 மணியளவில் சித்திரத் தேரில் எழுந்தருளினாள்.
சித்திரத் தேர் தடையின்றி வீதி வலம் வர சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பண்ணுடன் ஓதப்பட்டது. தொடர்ந்து அபிராமிப் பட்டர் அருளிய அபிராமி அந்தாதியும் ஓதப்பட்டது. ஆலய முன்றலில் குவிக்கப்பட்டிருந்த சிதறுதேங்காய்களும் உடைக்கப்பட்டன.
விசேட தீபாராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க காலை-09.30 மணியளவில் சித்திரத் 
தேர்ப் பவனி ஆரம்பமானது.
ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து வடம் தொட்டிழுத்தனர். சித்திரத் தேர் பவனியின் பின்னே 200 இற்கும் மேற்பட்ட ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், 150 இற்கும் மேற்பட்ட மாதர்கள் அடியளித்தும் துர்க்கை அம்பாளை மெய்யுருக வழிபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் அடியவர்கள் பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள், சப்பாணிக் காவடி, செதில் காவடிகள் முதலான வகை வகையான காவடிகள் எடுத்தும் துர்க்கை அம்பாளின் அருள்வேண்டித் துதி செய்தனர். அத்துடன் மங்கையர்கள் பலரும் கற்பூரச் சட்டிகள் ஏந்தியும், பாற்காவடிகள் எடுத்தும் துர்க்கை அம்பாளை நாடி வரங்கள் 
வேண்டினர்.
சித்திரத் தேர்ப் பவனியின் பின்னால் பல அடியவர்கள் அம்பாளின் புகழைப் போற்றிப் பஜனை பாடியவாறு கலந்து கொண்டனர். இவ்வாறு பஜனை பாடிய அடியவர்களில் பலரும் திடீரெனத் தம்மை மறந்து பரவச நிலையில் ஆடிய காட்சி பக்திப் பரவசத்தைப் பறைசாற்றுவதாய்
 அமைந்திருந்தது.
சித்திரத் தேர் முற்பகல்-10 மணியளவில் மீண்டும் இருப்பிடத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து பெருமளவான அடியவர்கள் அர்ச்சனை செய்தும் துர்க்கை அம்பாளை வழிபட்டனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள திருமுறை மடத்தில் சிறப்புப் பண்ணிசைக் கச்சேரியும் ஏற்பாடு 
செய்யப்பட்டிருந்தது.
தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த அடியவர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தினர், ஆலயத் தொண்டர்கள், சாரணர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். தெல்லிப்பழைப் பொலிஸாரும் ஆலய வளாகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் 
ஈடுபட்டிருந்தனர்.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு மேற்படி ஆலய நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் ஆலய மண்டபத்தில் அடியவர்களுக்கு விசேட அன்னதானம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி அடியவர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ஆலயச் சூழலிலும், ஆலயத்திற்குச் 
செல்லும் வீதிகள் பலவற்றிலும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுக் குளிர்மைமிகு பானங்கள் பரிமாறப்பட்டன.
இன்றைய தேர்த் திருவிழாவில் யாழ்.மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டிருந்தனர்.
துர்க்காதேவி ஆலயப் பிரதமகுரு சவஸ்ரீ க. செந்தில்ராஜக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தேர்த் திருவிழாக் கிரியைகளை சிறப்பாக ஆற்றினர்.தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டிருந்தது.
இதேவேளை, ஆவணி ஓண நன்னளான நாளை வியாழக்கிழமை(08.9.2022) துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் காலை-8.30 மணியளவில் துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவமும், மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் சிறப்பாக நடைபெறும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







குருநாதர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிளின் ஜனனதின வாழ்த்துகள் 31.08.22

 

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக்கொண்ட சந்நிதியான் ஆச்சிரம முதல்வரும் சந்நிதியான்ஆச்சிரம கலை பண்பாட்டுப்பேரவைத் தலைவரும் எங்கெல்லாம் சந்நிதியான் அழைத்துச்செல்கிறானோ அங்கெல்லாம் சென்று  தேவை அறிந்து உதவி புரிபவரும் எம்மைப்போன்ற 
பலரைப்பேசுவதற்குக் களம்அமைத்து தந்த குருநாதருமாகிய கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளுக்கு 31-08-2022 .புதன்கிழமை அன்று  73ஆவது ஐனனதினத்தில்எமது அன்பு கலந்த இனிய ஜனனதின வாழ்த்துகள்.என்றும் சந்நிதியான் திருவருளால் சேவைசெய்ய உடல் ,உள ஆரோக்கியத்துடன் இன்பம் நிறைந்திட.. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவதோடு முருகப்பெருமானையும்
 பிரார்த்திக்கின்றோம்.
எங்கள் இனிய ஜனனதின வாழ்த்துகள் 
கலாநிதி மோகனதாஸ் சுவாமி ஐயா.வளவளமுடம்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2022

அனைவருக்கும் “விநாயகர்” என்றால் “தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்” என்று பொருள்.விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார்.
 குணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள் 
இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை 
அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகின்றோம் .
ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான
 விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 
இந்த ஆண்டு இந்த சதுர்த்தி திதி ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்று
 கொண்டாடப்படுகிறது. 
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தினேஸ் லக்சிகா 29.08.2022

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் 
வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா   (தினேஷ் & லச்சி) 
தம்பதிகயினரின்  ஆறாவது சீரும்  திருமணநாள் 29-08.2022.இன்று 
தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார் 
அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் தம்பதியினரை  கிளிநொசசி பிள்ளையார் மற்றும் முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோசமாக
 சீரும் சிறப்புடன் வாழ்வீரக  
திருமண நாள்வாழ்த்து கவிதை
 அலைமகள் கலைமகள் மலைமகள் அருளோடு
கலைபேசும் கண்ணாளை காதலாய்க் கைப்பிடித்து
விலை பேச முடியாத செல்வங்களும் பெற்று
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணைந்த 
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்..கையோடு கை சேர்த்து இணைந்த
இதயங்கள் அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக தம்பதியினர் பல்லாண்டு. பல்லாண்டு காலம்  நீடூழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,வாழ்கவளமுடன் 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






Powered by Blogger.