ராமேசுவரத்தில் சூறாவளி


ராமேசுவரம் தீவில் சூறாவளிக் காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறையினர் திங்கள்கிழமை தடை விதித்தனர்.
ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட தீவுப் பகுதியில் சில நாள்களாக சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இதனை பொருட்படுத்தாமல் விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதால், 5 படகுகள் கடலில் மூழ்கின. இந் நிலையில் வங்கக் கடலில், மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து திங்கள்கிழமை காலை முதல் ராமேசுவரம் தீவுப் பகுதியில் சூறாவளிக் காற்று வீசியதில் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதனால் கடலில் சுமார் 5 அடி முதல் 7 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன.இதில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் விபரீதம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, திங்கள்கிழமை மீன்பிடிக்கச் செல்ல தயாராக இருந்த விசைப்படகு மீனவர்களுக்கு மீன்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கி உள்ளனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.