நாயின் பாலைக் குடித்து வளரும் இந்தியச் சிறுவன் (காணொளி இணைப்பு)

 _
03.08.20212.பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். வயிற்றில் ஏற்படுகின்ற நெருப்பு பசி என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

கிழக்கு இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆறு வயதுடைய ஓர் ஏழைச் சிறுவன் பசி காரணமாக நாயின் பாலைக் குடித்து வருகின்றான்.இவன் பெயர் சொட்டு குமார்.

ஒரு மண் வீட்டில் சிறுவன் சொட்டு குமாருடன் இவனது அம்மா, அம்மம்மா, இரு சகோதரர்கள் ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். 4 வருடங்களுக்கு முன் இவனது தந்தை இறந்து விட குடும்பம் வறுமையில் வாடுகின்றது. இவனது அண்ணன் அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றிய போதிலும் மாதம் 1200 இந்திய ரூபாவையே குடும்பத்துக்கு வழங்க முடிகிறதாம். வீட்டுக்குத் தேவையான விறகை குமாரின் தாயார் அருகிலுள்ள காட்டிலிருந்து பெற்றுக் கொள்கிறார். அன்றாட உணவாக ரொட்டியையும் காய்கறிகளையுமே சாப்பிடுகின்றனர்.

குமார் தனது பசியைப் போக்க நாயின் மடியில் இருந்து கடந்த ஒரு வருடமாக பாலை உறிஞ்சிக் குடித்து வருகின்றான். ஆயினும் இவன் மிகவும் ஆரோக்கியமாகவே உள்ளான். நாயும் இவன்பால் ஈர்ப்பைக் கொண்டிருக்கின்றது. இவனை தனது குட்டியாகவே அது நடத்துகின்றது.

உண்பதற்குப் போதுமான உணவு கிடைக்காததாலேயே நாய்ப் பாலைக் குடித்து வருவதாகவும் இப்பாலின் சுவையை விரும்புவதாகவும் ஊடகங்களுக்கு இச்சிறுவன் சொல்லியிருக்கின்றான்.
___

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.